For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிலர் பிரதமர் ஆவதற்கு வன்முறையை ஏன் கையாளணும்?: மோடி மீது கெஜ்ரிவால் மறைமுக தாக்கு

By Siva
|

டெல்லி: சிலர் பிரதமர் ஆவதற்காக வன்முறையை ஏன் கையாள்கிறார்கள் என்று தனக்கு புரியவில்லை என ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் மறைமுகமாக மோடியை தாக்கி பேசியுள்ளார்.

வடமேற்கு டெல்லியில் உள்ள சுல்தான்புரியில் இன்று திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தபோது ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மாலை அணிவித்துவிட்டு ஆட்டோ டிரைவர் ஒருவர் அவரது கன்னத்தில் அறைந்துவிட்டார். இதில் கெஜ்ரிவாலின் கண் வீங்கிவிட்டது.

Arvind Kejriwal slapped again in Delhi, blames Modi

இதை பார்த்த ஆம் ஆத்மி கட்சியினர் அந்த நபரை பிடித்து அடித்து உதைத்தனர்.

இந்நிலையில் இது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில்,

சிலர் பிரதமர் ஆவதற்காக வன்முறையை ஏன் கையாள்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. எங்களை தாக்குவதால் நாங்கள் அமைதியாகிவிடுவோம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுவோம் என்றார்.

கெஜ்ரிவால் மோடியை தான் மறைமுகமாக தாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After being slapped in Delhi, Aam Admi party chief Kejriwal told that, "I do not understand why do some people resort to violence for becoming the Prime Minister. If you think by attacking us, we will keep quite then you are wrong. We will fight this battle till the last breath." He made an indirect reference to BJP's PM candidate Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X