For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்- தெலுங்கானா முதல்வர் சர்ச்சை பேச்சு

ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மக்கள் மத்தியில் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள சிங்கரேணி நிலக்கரி நிறுவனத்தின் தொழிலாளர் சங்க தேர்தலில் டிஆர்எஸ் கட்சி சார்பிலான சங்கம் வெற்றி பெற்றது. இதன் வெற்றி விழாவில் டிஆர்எஸ் கட்சி தலைவரும் மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ் பேசினார்.

Attacks Bribe Officials Says Telangana CM KCR

அப்போது உயர் அதிகாரிகள் குறித்து தொழிலாளர்கள் பல்வேறு குறைகள் கூறினா். நிறுவனத்தின் மெடிக்கல் போர்டில் ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் பல்லாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டினர்.

நிறுவனத்தின் குடியிருப்பில் இடம் வேண்டும் என்றால் லஞ்சம் என பரவலாக ஊழல் இருப்பதாக கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய சந்திரசேகரராவ், இது நாள் வரை தொழிலாளர்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்தாதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

புதிய மாநிலம் என்பதால் பல்வேறு பிரச்னைகளை தினந்தோறும் சந்திக்க வேண்டியிருந்தது. அதனால் சிங்கரேணி தொழிலாளர் பிரச்னையில் கவனம் செலுத்தமுடியவில்லை என தொழிலாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள் என்றும் சந்திரசேகர்ராவ் ஆவேசமாக பேசினார். அவரது பேச்சு, அதிகாரிகளிடையே சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் பிரச்சினையில் கடந்த 40 மாதங்களாக உரிய கவனம் செலுத்தாததற்காக, தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் சந்திரசேகர ராவ் கூறினார்.

கடந்த ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரசேகர ராவ், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கொல்வேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Telangana Chief Minister K Chandrashekar Rao has spoken to public meeting, people will attack Bribe Officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X