அயோத்தி ராமஜென்மபூமி வழக்கு தொடர்ந்த சாமியார் மகந்த் பாஸ்கர் தாஸ் காலமானார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி யாருக்கு சொந்தம் என வழக்கு தொடர்ந்த சாமியார் மகந்த் பாஸ்கர் தாஸ் காலமானார்.

அயோத்தி ராமஜென்மபூமி வழக்கில் முக்கியமானவர் மகந்த் பாஸ்கர் தாஸ். இந்து மத அமைப்புகளில் ஒன்றான நிர்மோஹி அகாடாவின் தலைமை மத குருதான் இந்த மகந்த் பாஸ்கர் தாஸ்.

Ayodhya dispute: Mahant Bhaskar Das passes away after heart attack

அயோத்தி வழக்கில் 2010-ல் தீர்ப்பு வழங்கிய அலகாபாத் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சம அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கூறியது. இதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவர் மகந்த் பாஸ்கர் தாஸ்.

இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனிடையே மகந்த் பாஸ்கர் தாஸுக்கு திடீர் உடநலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி மகந்த் பாஸ்கர் தாஸ் காலமானார். அவரது உடல் பைசாபாத் சரயு ஆற்றங்கரையில் தகனம் செய்யப்பட்டது.

ராஜஸ்தான் பாஜக எம்.பி.

மேலும் ராஜஸ்தானின் அல்வர் தொகுதி பா.ஜ.க எம்.பி. மஹந்த் சந்த்நாத் உடல்நலக்குறைவால் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை காலமானார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Nirmohi Akhara chief Mahant Bhaskar Das passed away at 88 due to a heart attack on Saturday. Nirmohi Akhara is one of the three claimants to the disputed site in Ayodhya.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற