For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 மணி நேரம் உணவகங்கள் செயல்பட அனுமதி.. முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு

உணவு விடுதிகள் 3 மணி நேரம் இயங்க மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில், தடுப்பூசி செலுத்திய ஊழியர்களை கொண்டு, உணவு விடுதிகள் 3 மணி நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தையும் கொரோனாவைரஸ் விட்டு வைக்கவில்லை.. எனவே, அந்த மாநிலத்திலும் வருகிற 15ந் தேதி வரை லாக்டவுன் போடப்பட்டுள்ளது..

அதேசமயம், மாநில மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பல அறிவிப்புகளையும் மம்தா அறிவித்தும் வருகிறார்.

Bengal Eateries Allowed to Open for 3 Hours with Vaccinated Employees, Says Mamata Banerjee

நேற்றுகூட, பல்வேறு வர்த்தக அமைப்பு பிரதிநிதிகளுடன் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார்.. அந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, "இதுவரை மாநிலத்தில் 1.4 கோடி இலவச கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது

தொற்று குறைந்து வருவதால், தடுப்பூசி போட்டுக் கொண்ட ஊழியர்களுடன் உணவு விடுதிகள் தினமும் 3 மணி நேரம் செயல்படலாம்.. எனவே, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.. லாக்டவுன் முடிந்தவுடன் 25 சதவீத ஊழியர்களுடன் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிப்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.

அஞ்சி நடுக்குபவர்களுக்குத்தான் மரணம்.. என் கதையை உங்களால் முடிக்க முடியாது.. மோடிக்கு மம்தா சவால்! அஞ்சி நடுக்குபவர்களுக்குத்தான் மரணம்.. என் கதையை உங்களால் முடிக்க முடியாது.. மோடிக்கு மம்தா சவால்!

வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள், தங்களின் மாநில மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள உதவ வேண்டும்.. ஏனென்றால், ஒட்டுமொத்த மக்களுக்கும் மாநில அரசே தடுப்பூசி போட முடியாது... இத்தகைய பணிகளுக்காக வர்த்தக நிறுவனங்களும் உதவி செய்ய முன்வர வேண்டும்" என்றார்.
உணவு விடுதிகள் 3 மணி நேரம் திறந்து கொள்ள அனுமதிக்கப்படுவதாக மம்தா அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.. ஆனால் அதேசமயம், இந்த அறிவிப்பு எப்போது முதல் நடைமுறைக்கு வருகிறது என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

English summary
Bengal Eateries Allowed to Open for 3 Hours with Vaccinated Employees, Says Mamata Banerjee
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X