For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவனுடன் ஷவரில் நிர்வாண ஆட்டம்.. தெரியாத்தனமாக கணவனுக்கே போட்டோ அனுப்பி பலியான பெங்களூர் டீச்சர்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: தோழியை திருமணம் செய்வதற்காக அவரது கணவரை போலீசில் மாட்டிவிட நினைத்து தானே மாட்டிக்கொண்டார் பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கோகுல் (33). அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மனைவியையும் கொலை செய்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

மனைவிக்கு கள்ளக்காதலன் இருந்ததாக கூறும், கோகுல், அந்த ஆதாரங்களை எப்படி சேகரித்தேன், மனைவியின் தந்தையை தனது வழிக்கு கொண்டுவந்து கொலை வழக்கில் இருந்து எப்படி தப்பித்தேன் என்பது குறித்தும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரள வாலிபர்

கேரள வாலிபர்

டெல்லி மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்பட்ட விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக வாட்ஸ்சப் மூலமும், தொலைபேசி மூலமும் மிரட்டல் விடுத்த வழக்கில், பெங்களூரில் வசித்து வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த கோகுல் என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரபரப்பு வாக்குமூலம்

பரபரப்பு வாக்குமூலம்

போலீசாரிடம் கோகுல் அளித்த வாக்குமூலம், திரில் திரைப்படங்களை வீழ்த்தும் அளவுக்கு உள்ளது. வாக்குமூலத்தில் கோகுல் கூறியதாவது: திருச்சூரில் பள்ளி, கல்லூரி படித்த காலகட்டத்தில் எனக்கும் உடன் படித்த கரோலின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால் அவர் மேற்படிப்புக்காக திருச்சிக்கும், நான் டெல்லிக்கும் சென்றதால் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மனைவியின் கள்ளக்காதல்

மனைவியின் கள்ளக்காதல்

இந்நிலையில்தான், டெல்லியில் அனுராதா என்ற சாப்ட்வேர் இன்ஜினியரிங் வேலை பார்த்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்தேன். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பணிநிமித்தமாக பெங்களூருக்கு இடம் பெயர்ந்து வந்தேன். இங்கு, அனுராதா கல்வி நிறுவனம் ஒன்றில் டீச்சராக வேலைக்கு சேர்ந்தார். வேலை பார்த்த கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர் ஒருவருடன், அனுராதாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.

செல்போன் மெசேஜ்

செல்போன் மெசேஜ்

அனுராதாவின் செல்போனுக்கு அந்த மாணவன் அனுப்பிய மெசேஜை பார்த்த பிறகுதான், எனக்கு அவர்களின் கள்ளக்காதல் பற்றி தெரியவந்தது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளானேன். அனுராதாவின் தந்தை ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டன்ட் என்பதால், ஆதாரத்துடன் சிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

போலி இ-மெயில்

போலி இ-மெயில்

அனுராதா சாய் பாபா வழிபாட்டில் ஈடுபாடுடையவர் என்பது எனக்கு தெரியும். எனவே, சாய் என்ற பெயரில் ஒரு இ-மெயில் அக்கவுண்டை தொடங்கி, அனுராதா இ-மெயிலுக்கு அனுப்பி பூஜை, பக்தி பற்றிய தகவல்களை கொடுத்தேன். அதை நம்பி அவரும், இ-மெயிலில் சந்தேகங்களை கேட்டார். இதையடுத்து, உங்கள் வாழ்க்கையில் செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சாய்பாபா விரும்புகிறார் என்று நான் மெயில்கள் அனுப்பினேன்.

மனைவி ஒப்புதல்

மனைவி ஒப்புதல்

இந்த மெயிலை நம்பிய அனுராதா, தனக்குள்ள கள்ளக்காதல் விவகாரத்தை இ-மெயிலில் தெரிவித்தார். இது எனக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. இருப்பினும், கள்ளக்காதலை விட்டுவிடுமாறு அறிவுரை கூறி மெயில் அனுப்பிவிட்டு அத்தோடு மெயிலுக்கு குட்பை சொல்லிவிட்டேன்.

பூஜை போடலாமே

பூஜை போடலாமே

இதன்பிறகு ஆஷா என்ற பெயரில் ஜோதிடர் போல ஒரு இ-மெயில் அக்கவுண்டை ஒபன் செய்து, அதில் இருந்து அனுராதா மெயில் ஐடிக்கு, இ-மெயில் அனுப்பி குறைகளை கேட்டேன். அவரும் குறைகளை சொன்னார். கணவரோடு இணைந்து வாழ விருப்பமில்லை என்றும் அந்த இ-மெயிலில் பதில் அனுப்பியிருந்தார். கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதலை தொடரும் வகையில் ஒரு பூஜை செய்ய தயார் என்று நானே (ஆஷா பெயரில்) அனுராதாவுக்கு இ-மெயில் அனுப்பி வைத்தேன்.

கணவருக்கே நிர்வாண போட்டோ

கணவருக்கே நிர்வாண போட்டோ

இதை நம்பிய அனுராதாவும் பூஜை செய்யுமாறு கூறினார். இந்த பூஜைக்கு நீயும், உன் கள்ளக்காதலனும் நிர்வாணமாக வந்து நின்று ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று இ-மெயில் அனுப்பினேன். ஆனால் அதற்கு அனுராதா தயக்கம் காட்டினார். எனவே, இருவரும் நிர்வாணமாக நின்று போட்டோவையாவது அனுப்புங்கள் என்று பதில் மெயில் அனுப்பினேன். இதற்கு ஒப்புக்கொண்ட அனுராதா, ஒரு ஹோட்டலில் ரூம் புக் செய்து, தனது மாணவ கள்ளக்காதலுடன் ஷவரில் நிர்வாணமாக கூத்தடித்துக்கொண்டே அதை போட்டோ எடுத்து அனுப்பி வைத்தார்.

விவாகரத்து செய்யலாமா

விவாகரத்து செய்யலாமா

கணவனுக்கே, கள்ளக்காதலுடன் இருக்கும் போட்டோவை அனுப்பி வைக்கிறோம் என்று அனுராதா நினைக்கவில்லை. ஆனால் எனக்கு அடுத்தடுத்து ஆதாரங்கள் சிக்கிவிட்டன. அதிர்ச்சியில் உறைந்த நான், இந்த ஆதாரங்களை வைத்து அனுராதாவை விவாகரத்து செய்துவிடலாமா என்று யோசித்தேன். ஆனால் விவாகரத்து செய்தால், பெண் பிள்ளை, தாயுடன் செல்லும் நிலை வரும் என்பதால், குழந்தையை பிரிய மனமின்றி தவித்தேன்.

கொலை திட்டம்

கொலை திட்டம்

இந்நிலையில்தான், பேஸ்புக்கில், எனது காதலி கரோலின் மீண்டும் அறிமுகமானார். அவருக்கும் திருமணமானது தெரியவந்தது. இருப்பினும் அனுராதாவை கொலை செய்துவிட்டு, கரோலினை அடைய திட்டமிட்டேன். இப்படி செய்வதால், எனது காதலியுடனும் வாழ முடியும், குழந்தைகளும் பிரியமாட்டார்கள் என்பது எனது திட்டமாக இருந்தது.

மது குடித்தால் பலன்

மது குடித்தால் பலன்

இதையடுத்து ஆஷா என்ற இ-மெயில் முகவரியில் இருந்து அனுராதாவுக்கு மெயில் அனுப்பி, ஜூலை 27ம் தேதி பூஜை செய்யப்போகிறேன். அன்று நீங்கள் நல்ல போதையில் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் உங்கள் மனது குழப்பமில்லாமல் இருக்கும். பூஜைக்கு பலன் கிடைக்கும் என்று கூறினேன். இதை நம்பி, அரை பாட்டில் விஸ்கியை குடித்துவிட்டு வீட்டில் அனுராதா தயாராக இருந்தார்.

அடித்தே கொன்றேன்

அடித்தே கொன்றேன்

பூஜைக்கு பிறகு கணவனுக்கு மந்திரம் மூலம் கண்கள் கட்டப்பட்டுவிடும. பிறகு கள்ளக்காதலனோடு எப்போதும் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று நினைத்து அனுராதா ஆனந்தத்தில் இருந்தார். ஆனால், கடுப்போடு வீட்டுக்கு வந்த நான், விநாயகர் சிலையை எடுத்து, அனுராதா தலையின் பின்பக்கம் மற்றும் முன்பக்கம் அடித்து கொலை செய்தேன். பின்னர், போதையில் இருந்த அனுராதா தவறி விழுந்து அடிபட்டு இறந்துவிட்டார் என்று அவரின் பெற்றோருக்கும் பிறருக்கும் தகவல் கொடுத்தேன்.

காப்பாற்றிய மாமனார்

காப்பாற்றிய மாமனார்

இந்த சம்பவம் குறித்து மடிவாளா போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மடிவாளா போலீசார் என்னைத்தான் குற்றவாளியாக சந்தேகித்து விசாரித்தனர். ஆனால் எனது மாமனாரோ, எனது மருமகன் ரொம்ப நல்லவர் என்று கூறி என்னை பற்றி அறியாமல் போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்தார். என்னை விசாரித்த போலீசாரிடமும் "நான் ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி, எனக்கு தெரியாதா குற்றவாளி யார்? நிரபராதி யார்?" என்று எனக்கூறி சண்டை போட்டார். எனவேதான் கொலை வழக்கு பதியாமல் போலீசார் என்னை விட்டுவிட்டனர்.

பிஷப் பெயரில் மோசடி

பிஷப் பெயரில் மோசடி

இந்நிலையில்தான், கரோலினை அவரது கணவரிடமிருந்து பிரித்து என்னை திருமணம் செய்ய முயன்றேன். கரோலினோ, கணவர்தான் முக்கியம் என்ற நிலைப்பாட்டில் இருந்ததால் என்னோடு நெருங்க மறுத்துவிட்டார். எனவே, பெங்களூர் மறைமாவட்ட பேராயர் பெயரில் அவரது முகவரிக்கு கடிதம் எழுதி, அவரையும் ஆன்மீக வழியில் மனமாற்றம் செய்ய முயன்றேன். அதாவது "உன் கணவரோடு உனக்கு நல்ல வாழ்க்கையமையவில்லை என்று தெரிகிறது. எனவே வேறு ஒருவரை கல்யாணம் செய்துகொள்" என்று பிஷப் பெயரில் கடிதம் எழுதி மனதை கலைத்தேன்.

விமானங்களுக்கு மிரட்டல்

விமானங்களுக்கு மிரட்டல்

மற்றொருபுரம், கரோலினின் கணவரை போலீசாரிடம் மாட்டி வைத்து பிரிக்க எண்ணிதான், வாட்ஸ்சப், போன் மூலம் விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தேன். இதற்காக, கரோலின் கணவரின் பெயரில், சிம் கார்டுகளை வாங்கினேன். ஆனால், இப்போது இந்த வழக்கிலும் சிக்கி, கொலை வழக்கிலும் சிக்கிவிட்டேன். காவல்துறையிடம் விளையாடியது தப்பாக முடிந்துவிட்டது. இவ்வாறு தனது வாக்குமூலத்தில் கோகுல் கூறியுள்ளார்.

சிக்கியது எப்படி?

சிக்கியது எப்படி?

வாட்ஸ்சப் மற்றும் தொலைபேசி மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட சிம்கார்டை வைத்து, கரோலினின் கணவரைத்தான் போலீசார் முதலில் விசாரணைக்கு உட்படுத்தினர். ஆனால், அவரை கைது செய்யவில்லை. தான் அவ்வாறு செய்யவில்லை என்று அந்த நபர் கூறியதால், அவரது குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் குரல் வித்தியாசம் இருந்ததால், சந்தேகத்தின் பேரில் கோகுலை சுற்றி வளைத்த போலீசார் அவரிடம் விசாரித்தபோது உண்மைகளை கக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The accused, MG Gokul during intense interrogation carried out on Saturday, confessed to killing Anu using a idol. It was a plan devised so meticulously over five years that everyone believed in whatever he orchestrated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X