ஹோட்டலில் கூத்தடித்த திலீப்-காவ்யா.. நேரில் கண்டதை மஞ்சுவிடம் சொன்ன பாவனா! கடத்தலின் பரபர பின்னணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: திலீப்புடன் உள்ள உறவை துண்டித்து கொள்ள அவரது முதல் மனைவி மஞ்சுவாரியர் முடிவு செய்வதற்கு நடிகை பாவனா ஒரு வகையில் காரணமாக இருந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

சினிமா நடிகர்களுக்கான கலைவிழா வெளிநாடு ஒன்றில் நடந்தபோது வெளிநாட்டிற்கு மனைவி மஞ்சுவாரியார், மகளுடனும், பிற நட்சத்திரங்களுடனும் சென்றுள்ளார் திலீப். ஆனால் திடீரென்று தனது மனைவியையும் மகளையும் மட்டும் கேரளாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

காவ்யா மாதவன், இரவில் திலீப் தங்கியிருந்த ஓட்டலுக்கு வருவதாக கூறியதையடுத்தே, மஞ்சு வாரியரையும், மகளையும் ஊருக்கே திருப்பியனுப்பினாராம் திலீப்.

பார்த்த பாவனா

பார்த்த பாவனா

இதையடுத்து, காவ்யா, இரவில் திலீப்பும் தங்கியிருந்த அறைக்கு வந்துள்ளார். இவர்கள் இருவரும் தங்கிய அறை அருகேதான் பாவனாவின் அறையும் இருந்துள்ளது. இரவில் எதற்காகவோ பாவனா தனது அறையை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது திலீப்பும், காவ்யாவும் ஒன்றாக ரூமிலிருந்து வெளியேறியதை பாவனா பார்த்துள்ளார்.

மறைத்த பாவனா

மறைத்த பாவனா

அதற்கு முன்பாகவே அரசல், புரசலாக இந்த உறவு பற்றி அறிந்திருந்த பாவனா, அதை நேரில் பார்த்து அதிர்ந்தார். மஞ்சு வாரியர், பாவனாவின் தோழி என்பதும், இந்த அதிர்ச்சிக்கு முக்கிய காரணம். இது தொடர்பாக மஞ்சு வாரியரின் உறவினர்களில் ஒருவரும் பிரபல நடிகர் ஒருவரின் மனைவியுமான நடிகையிடம் பாவனா தெரிவித்துள்ளார். அதனை அவர் திலீப்புடன் நடித்த மற்றொரு நடிகை ஒருவரிடம் கூறியுள்ளார்.

நேரில் நியாயம் கேட்ட மஞ்சு

நேரில் நியாயம் கேட்ட மஞ்சு

இந்த தகவல்களை அறிந்த மஞ்சுவாரியர் ஒரு நாள் நடிகை பாவானாவின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அப்போது, "திலீப் குறித்து தகவல்கள் அறிந்தபோதும் நெருங்கிய தோழியான நீ ஏன் என்னிடம் கூறவில்லை" என்று கேட்டு பாவனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஸ்பீக்கர் போன்

ஸ்பீக்கர் போன்


பாவனாவும், மஞ்சு வாரியரும் பேசிக்கொண்டு இருந்தபோது, இந்த உறவை நிரூபித்துக்காட்டுகிறேன் என கூறிய பாவனா தனது போனில் இருந்து காவ்யா மாதவனின் தாயார் போனுக்கு அழைத்துள்ளார். அவர்கள் திலீப்புடனான உறவு பற்றி பேசியதை ஸ்பீக்கர் போனில் கேட்ட மஞ்சுவாரியர் நடந்த விபரங்களை உறுதி செய்துள்ளார். மேலும் மஞ்சுவாரியர் இதை ஒரு போதும் அறியக்கூடாது என்றும் காவ்யா மாதவனின் தாயார் அப்போது போனில் பேசினாராம். இதனை கேட்டு மஞ்சுவாரியர் பாவனா வீட்டில் உட்கார்ந்து அழுதுள்ளார். இதன் பிறகே மஞ்சுவாரியர், திலீப்பை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

பழி வாங்கல்

பழி வாங்கல்

பாவனா இவ்வாறு ஸ்பீக்கர் போனில் போட்டு மஞ்சுவாரியர் விவாகரத்து செய்ததால்தான் திலீப் அவர் மீது கோபத்தில் இருந்ததாக கூறுகிறது கேரளா சினிமா உலகம். இதை மனதில் வைத்துதான், பாவனாவை நாகரீகமற்ற வகையில் பழி வாங்கியுள்ளார் திலீப்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bhavana was the reason for Dileep and his first wife Manju's divorce, says sources.
Please Wait while comments are loading...