For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டார்ட் ஆன சேவை.. இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது.. பயணிகள் மகிழ்ச்சி

இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் பஸ் சேவை இன்று தொடங்கியது

Google Oneindia Tamil News

காத்மாண்டு: 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது, பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

நேபாளுடன் திறந்த எல்லைகளை கொண்டது நம் இந்தியா.. எந்தவித எல்லைத்தடைகளுமின்றி, இந்த இரு நாட்டு மக்களும் ,வர்த்தக பொருள்களும் எல்லைகள் தாண்டி நெருக்கத்துடன் பயணித்து வருகிறது.

அந்த வகையில், இந்தியா - நேபாளம் இடையே பஸ், ரயில் போக்குவரத்துக்கள் இரு நாட்டுக்கும் அடித்தளமாக இருந்து வருகிறது.. ஆனால், இந்தியாவில் 3 வருட காலமாக கொரோனா பரவல் பாதிப்பு ஏற்படவும், திடீரென பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது..

 அது தான் டாடா! ஒரே நாளில் அப்படியே ஏர் இந்தியா பக்கம் போன விமானிகள்.. ஸ்தம்பித்த இண்டிகோ அது தான் டாடா! ஒரே நாளில் அப்படியே ஏர் இந்தியா பக்கம் போன விமானிகள்.. ஸ்தம்பித்த இண்டிகோ

 பஸ் சேவை

பஸ் சேவை

அதாவது, கொரோனாவுக்கு முன்பு, மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து நேபாளத்துக்கு பஸ் போக்குவரத்து இயங்கி வந்தது. கொரோனாவால் இத்தனை வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து, பிறகு மீண்டும் தொடங்கி உள்ளது.. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டு வரை 615 கி.மீ பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது... வட மேற்கு வங்காள மாநில போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான இந்த பஸ் சேவை தனியார் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

 டிக்கெட் விலை

டிக்கெட் விலை

நகரத்தில் உள்ள டென்சிங் நோர்கே பஸ் டெர்மினஸில் இந்த பஸ்களுக்கான டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன... டிக்கெட்டுகளின் விலை ரூ.1,500 ஆகும். மொத்தம் 45 சீட்டுகள் கொண்ட இந்த பஸ், சிலிகுரியில் இருந்து திங்கட்கிழமை, புதன்கிழமை, மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது... மாலை 3 மணிக்கு இந்த பஸ் புறப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 45 சீட்கள்

45 சீட்கள்

அந்த வகையில், மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுக்கு பஸ் ஒன்று புறப்பட்டது.. 45 சீட்கள் கொண்ட அந்த பஸ்சில் சில பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர்... மேலும், 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே இதில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. சிலிகுரி, டார்ஜிலிங் மற்றும் அண்டை நாடான சிக்கிம் போன்ற இடங்களுக்கு வாழ்வாதாரத்திற்காக நூற்றுக்கணக்கான நேபாள மக்கள் சென்று வருகின்றனர்..

 மகிழ்ச்சி - வரவேற்பு

மகிழ்ச்சி - வரவேற்பு

அந்தவகையில், இந்த புதிய பஸ் சேவை பெரிதும் பயன்தரும் என்று சொல்லப்படுகிறது.. அதேசமயம், இந்த பகுதியில் சுற்றுலா சேவைகளை மேம்படுத்த உதவும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டு வரை 615 கி.மீ பஸ் சேவை வழங்கப்பட்டுள்ளது, மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

English summary
big news and indo nepal bus service begins from west bengals siliguri after two years இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் பஸ் சேவை இன்று தொடங்கியது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X