என்னது, எல்கேஜிக்கு ரூ.2 லட்சம் கட்டணமா.. நாடு எங்க சார் போகுது?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பெங்களூரு பள்ளி ஒன்றில் எல்கேஜிக்கு ரூ.2 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது

  பெங்களூர்: எல்.கே.ஜி படிப்பிற்கு பெங்களூரிலுள்ள முன்னணி பள்ளியொன்று ரூ.2லட்சம் கட்டணமாக வாங்குவதாக குறிப்பிட்டுள்ள கையேடு ஒன்றின் புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.

  பெங்களூர் எம்.ஜி.ரோடு அருகேயுள்ள செயின்ட் மார்க்ஸ் சாலையில் உள்ளது பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளி. இப்பள்ளியின் 2017-18ம் கல்வி ஆண்டுக்கான, கட்டண கையேடுதான் இப்படி வைரலாகியுள்ளது.

  Bishop Cotton Boys' School Bangalore Fee structure goes viral

  ட்யூசன் ஃபீஸ் என ரூ.39,830 வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் என்ற பெயரில் ரூ.62,500 வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, எச்சரிக்கை டெபாசிட், ஸ்மார்ட் கிளாஸ், கிறிஸ்துமஸ் ஃபெல்லோஷிப் மதிய உணவு, கட்டிட நிதி என பல்வேறு பிரிவுகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆக மொத்தம் கட்டணம் ரூ.202,000 வசூலிக்கப்படுகிறது. இது எல்கேஜிக்குதான்.

  பெங்களூரிலுள்ள புகழ்பெற்ற பல பள்ளிகளும் ஏறத்தாழ இதே அளவுக்கு கட்டணம் வசூலிக்கின்றன. குடும்ப கட்டுப்பாடு திட்டங்களால் பெறமுடியாத வெற்றியை பள்ளிக்கூட கட்டணங்கள் ஈட்டிக் கொடுத்துவிட்டன. ஆம், கட்டணத்திற்கு பயந்தே, பல பெற்றோர் ஒரு குழந்தை, அல்லது அதிகபட்சமாக இரு குழந்தைகளுடன் நிறுத்திக்கொள்கிறார்கள்.

  கிராமப்புறங்களில் உள்ள முந்தைய தலைமுறையினர் பலரும் பள்ளி முதல் கல்லூரியில் பிஹெச்டி படித்து முடிக்கும் வரை கூட இவ்வளவு தொகையை கட்டணமாக செலுத்தியிருக்க வாய்ப்பில்லை. அதிலும் ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் கட்டணத்தின் ஒரு பகுதியும் திரும்ப கிடைத்துவிடும்.

  நகர்ப்புறங்களில் பல பள்ளிகளிலும் இவ்வாறுதான் இப்போதெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Bishop Cotton Boys' School, Bangalore, Fee structure for the Year 2017-18 (LKG) is goes viral.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற