For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பள்ளிப் பருவத்தில் சிறந்த மாணவி ஜெயலலிதா.. பிஷப் காட்டன் பள்ளி முதல்வர் பெருமிதம் !

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அவர் படித்த பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

பெங்களூர்: மறைந்த ஜெயலலிதா பள்ளிப் பருவத்தில் சிறந்த மாணவியாகவும், நல்ல தடகள வீராங்கனையாகவும் திகழ்ந்தவர் என்று அவர் படித்த பெங்களூர் பிஷப் காட்டன் பள்ளியின் முதல்வர் லாவண்யா மித்திரன் கூறியுள்ளார்.

கடந்த 1948 பிப்ரவரி 24-ல் மைசூரில் பிறந்தார் ஜெயலலிதா. தனது இரண்டு வயதில் தந்தையை இழந்தார். பின்னர் அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார். 1952 முதல் 1958 -ம் ஆண்டு வரை பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார். இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு அவர் பயின்ற பிஷப் காட்டன் பள்ளியில் இன்று காலை இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Bishop Cotton remembers Jayalalithaa as a 'brilliant student'

ஜெயலலிதாவின் மறைவு குறித்து பிஷப் பள்ளியின் முதல்வர் லாவண்யா மித்திரன் கூறுகையில், மறைந்த ஜெயலலிதா இந்த பள்ளியில் தான் ஆரம்ப கல்வி பயின்றார். பள்ளியில் படித்த போது மிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா, படிப்பு மட்டுமின்றி விளையாட்டிலும் சிறந்த மாணவியாக விளங்கினார். பின்னாளில் அவர் முதல்வராக பதவியேற்ற போது அந்த விழாவில் இரண்டு முறை கலந்துகொண்டேன் என நினைவு கூறினார். மேலும் ஜெயலலிதா நான்காம் வகுப்பு படித்த போது சக மாணிவிகள், ஆசிரியருடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

English summary
The Bishop Cotton Girls' School in Bengaluru fondly remembered J Jayalalithaa as a 'brilliant student' on Tuesday. The former Chief Minister of Tamil Nadu had been a student at the school from 1952 to 1958.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X