For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேப்பர்ல தலைப்பு செய்தி வரணும்னு சொத்துக்களை முடக்கியிருக்காங்க.. கார்த்தி சிதம்பரம் கூல் ட்வீட்

Google Oneindia Tamil News

டெல்லி: பத்திரிகையில் தலைப்பு செய்தியாக வர வேண்டும் என்பதற்காக எனது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2007ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி ஆகியோருக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு விதிமுறைகளுக்கு மாறாக ரூ.305 கோடி அன்னிய முதலீடுக்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம் அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Bizarre and Outlandish, Says Karti Chidambaram

இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கி உத்தரவிட்டது. டெல்லி, ஊட்டி, கொடைக்கானலிலுள்ள பங்களாக்கள், ஐரோப்பாவிலுள்ள வீடு, பார்சிலோனாவிலுள்ள சொத்துக்களும் இதில் அடக்கம்.

இது தொடர்பாக, கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், வெளியிட்டுள்ள தகவலில், சட்டம், உண்மைகள் அப்பாற்பட்டு, சொத்து முடக்கம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகளில் தலைப்பு செய்தி வர வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இதில் உள்ளது. நீதித்துறையின் முன்பு இந்த உத்தரவெல்லாம் நிற்காது. சம்மந்தப்பட்ட நீதித்துறை அமைப்பை அணுக முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
"A bizarre and outlandish ”Provisional Attachment Order” which is not based on law or facts but on crazy conjectures. This is meant only to grab ”headlines”. The ”order” will not withstand judicial scrutiny, review or appeal. Will approach the appropriate legal forum"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X