For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோனியாவுக்கு எதிராக உமாபாரதி? ராகுலுக்கு எதிராக ஸ்மிருதி இரானி?

By Mathi
|

டெல்லி: லோக்சபா தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எதிராக உமாபாரதியையும் அமேதியில் ராகுலுக்கு எதிராக நடிகை ஸ்மிருதி இரானியையும் களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தலில் உ..பி.யின் ஜான்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமாபாரதி. ஆனால் அவரை சோனியாவுக்கு எதிராக களமிறக்க வேண்டும் என்று ராம்தேவ் போன்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் சோனியாவுக்கு எதிராக உமாபாரதி களமிறக்கப்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

BJP may pit Umabharti against Sonia and Smriti Irani agains Rahul?

ராகுலுக்கு எதிராக ஸ்மிருதி இரானி

இதனிடையே அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் குமார் விஸ்வாஸ் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ராகுல் மற்றும் குமார் விஸ்வாஸை எதிர்கொள்ளக் கூடிய ஒரு வலுவான வேட்பாளரை நிறுத்த பாரதிய ஜனதா ஆலோசித்து வந்தது. தற்போது தொலைக்காட்சி நடிகை ஸ்மிருதி இரானியை அமேதியில் களமிறக்குவது என பாஜக முடிவு செய்துள்ளது,.

இது குறித்து ஸ்மிருதியிடமும் பாஜக மேலிடம் தெரிவித்துள்ளதாம். குஜராத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஸ்மிருதி இரானி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Going all out to put up a strong candidate against Congress Vice President Rahul Gandhi for the Lok Sabha polls, BJP is likely to field its party Vice President Smriti Irani from the constituency of Amethi. Meanwhile, speaculation is also rife that BJP will announce Uma Bharti as its candidate against Congress President Sonia Gandhi in Rae Bareli.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X