ம.பி.யில் நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் வெறித்தனமாக அடித்த பாஜக எம்.எல்.ஏ. கைது
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அதிகாரியை பொதுமக்கள் முன்னிலையில் கிரிக்கெட் பேட்டால் அடித்து துவைத்த பாஜக எம்.எல்.ஏ. ஆகாஷ் விஜயவர்ஜியா கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கைலாஷ் விஜயவர்ஜியா. இவரது மகன் ஆகாஷ், பாஜக எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

இந்தூரில் நகராட்சி அதிகாரிகள் குழுவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டிருந்தனர். இதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு பாஜக எம்.எல்.ஏ. ஆகாஷூம் ஆதரவாக களமிறங்கினார். ஆனால் நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் உறுதியாக இருந்தனர்.
#WATCH Madhya Pradesh: Akash Vijayvargiya, BJP MLA and son of senior BJP leader Kailash Vijayvargiya, thrashes a Municipal Corporation officer with a cricket bat, in Indore. The officers were in the area for an anti-encroachment drive. pic.twitter.com/AG4MfP6xu0
— ANI (@ANI) June 26, 2019
இதில் ஆத்திரமடைந்த ஆகாஷ், கிரிக்கெட் பேட்டால் மாநகராட்சி அதிகாரியை பொதுமக்கள் முன்னிலையில் வெளுவெளுவென வெளுத்தார். போலீசார் முன்னிலையில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
போலீசார் தடுத்த போதும் அதையும் மீறி அதிகாரியை அடித்தார் ஆகாஷ். இது அப்பகுதி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் அடித்து துவைக்கும் வீடியோவும் வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆகாஷ் விஜயவர்ஜியா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளனர்.
-
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம்












Click it and Unblock the Notifications