For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

21 மாநிலங்களில் பறக்கும் "காவி" கொடி.. அடுத்த குறி கர்நாடகா!

திரிபுரா, நாகலாந்து மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று இருப்பதன் மூலம் அக்கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    நாகாலாந்தில் நாற்காலிக்கு ஆசைப்பட்டால் மணிப்பூரில் ஆட்சி கவிழும்?

    டெல்லி: நாடு முழுவதும் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. திரிபுரா, நாகலாந்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளதன் மூலம் 21 மாநிலங்களில் தற்போது பாஜகவின் காவிக்கொடி பறக்கிறது.

    காங்கிரஸ் கட்சி அல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது பாஜகவின் கருத்து. தென் தமிழகத்தில் குறிப்பாக தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் தமிழக பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

    இமாசலபிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இப்போது வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. தற்போது பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களில் 14 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடத்துகிறார்கள்.

    பாஜக தனி பெரும்பான்மை

    பாஜக தனி பெரும்பான்மை

    9 மாநிலங்களில் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடைபெறுகிறது. அருணாசலபிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, இமாச்சலபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.

    கூட்டணி கட்சிகள் ஆதரவு

    கூட்டணி கட்சிகள் ஆதரவு

    அசாம் (அசாம் கன பரி‌ஷத், போடடோ லேண்ட் கட்சிகள் ஆதரவு), கோவா (கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டி ராவாடி கோமந்தக் கட்சிகள் ஆதரவு), ஜார்க்கண்ட் (அகில ஜார்க்கண்ட் மாணவர்கள் யூனியன் ஆதரவுடன்) மகாராஷ்டிரா, மணிப்பூர் (நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி மற்றும் லோக் ஜனசக்தி ஆதரவுடன்)
    இது தவிர பீகார்,காஷ்மீர், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆதரவுடன் ஆட்சி நடைபெறுகிறது.

    காங்கிரஸ் ஆட்சி

    காங்கிரஸ் ஆட்சி

    காங்கிரஸ் கட்சியின் கையிலிருந்து பல மாநிலங்கள் நழுவியுள்ளது. தற்போது வெறும் 5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி புரிந்து வருகிறது. கர்நாடகா, மிஸோரம், புதுச்சேரி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. மேகாலயாவில் ஆட்சியை மீண்டும் தக்கவைக்கும் நிலை காங்கிரஸ் கட்சிக்கு கனியும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    பிராந்திய கட்சிகள்

    பிராந்திய கட்சிகள்

    பாஜக, காங்கிரஸ் தவிர்த்த பிற கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்று எடுத்தால் ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், ஓடிஷா, தமிழ்நாடு, கேரளா என 6 மாநிலங்கள் உள்ளன. அங்கு பிராந்தியக் கட்சிகள், இடதுசாரிகள் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலங்களின் மீது பாஜகவின் கவனம் திரும்பியுள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பாஜக அரசுக்கு கடும் போட்டி கொடுத்து வருகிறார்.

    கனவில் கூட முடியாது

    கனவில் கூட முடியாது

    தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் பாஜக இல்லை. கர்நாடகத்தில் மட்டுமே அது சற்று நப்பாசையுடன் உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில் அது கனவில் கூட ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலைதான் இன்றளவும் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

    கர்நாடகத்திற்குக் குறி

    கர்நாடகத்திற்குக் குறி

    கர்நாடக சட்டசபைத் தேர்தலில் எப்படியும் ஆட்சியைப் பிடித்து விடுவது என்ற குறிக்கோளுடன் பல வேலைகளை பாஜக பார்க்க ஆரம்பித்து விட்டது. இதற்காகவே காவிரி விவகாரத்தில் பாஜக, கர்நாடகத்திற்கு முழு ஆதரவாக நடந்து கொண்டு வருகிறது.

    பாஜக பப்பு வேகாது

    பாஜக பப்பு வேகாது

    தமிழகத்தில் தலைகீழாக நின்றாலும் வேலைக்கு ஆகாது என்பதால்தான் தமிழகத்தை அது கண்டு கொள்ளவில்லை. மாறாக கர்நாடகத்திற்கு முழு ஆதரவாக அது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் பாஜக இல்லை. கர்நாடகத்தில் மட்டுமே அது சற்று நப்பாசையுடன் உள்ளது.

    English summary
    The BJP on Saturday won Tripura After 25 years under the Left Front's rule, taking the total number of states where it is in power to 21.the Nationalist Democratic Progressive Party in Nagaland, the saffron party now stands to control 21 of the 29 states.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X