ஆரத்தி வீடியோ.. ராகுலை கிண்டல் செய்ய முயன்று வசமாய் சிக்கிய 2 பாஜக தலைவர்கள்.. நெட்டிசன்கள் விளாசல்
இந்தூர்: பாரத் ஜோடோ யாத்திரை செல்லும் ராகுல் காந்தி நேற்று மத்திய பிரதேசத்தில் ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த வேளையில் அவர் ஆரத்தி தவறாக எடுத்ததாக கூறி வீடியோவுடன் ராகுல் காந்தியை பாஜகவின் சமூக வலை தள பிரிவு தேசிய பொறுப்பாளர் அமித் மாளவியா கிண்டல் செய்தார். அப்போது அமித் மாளவியா தவறான அறிவியல் காரணத்தை மேற்கோள் காட்டியதால் காங்கிரஸ் மற்றும் நெட்டிசன்களால் திருப்பி தாக்கப்பட்டார். இதேபோல் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியையும் நெட்டிசன்கள் விடாமல் விளாசினர்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை எனும் பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மொத்தம் 12 மாநிலம், 2 யூனியன் பிரதேசம் வழியாக 150 நாட்கள் வரை நடைபெற உள்ளது. இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் 7 ம் தேதி கன்னியாகுமரியில் துவங்கியது.

மத்திய பிரதேசத்தில் யாத்திரை
தற்போது இந்த யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிராவை கடந்து மத்திய பிரதேசத்தை அடைந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் யாத்திரை சென்று வருகின்றனர். இதற்கிடையே தான் நேற்று முன்தினமும், நேற்றும் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி இணைந்து யாத்திரை சென்றார்.

ராகுல் காந்தி ஆரத்தி
இந்த யாத்திரையின்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் நேற்று மத்திய பிரதேசத்தில் ஓம்காரேஷ்வரில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றனர். பிறகு 'மா நர்மதா' ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த வேளையில் ராகுல் காந்தி ஆரத்தி வழிபாடு செய்தார். அப்போது அவர் கையில் விளக்கு ஏந்தி ஆரத்தி எடுத்தார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகின.

தவறான திசையில் ஆரத்தி?
பொதுவாக ஆரத்தி கடிகார முள் சுற்றும் திசையில் எடுக்கப்பட வேண்டும் எனவும், ஆனால் ராகுல் காந்தி கடிகார முள் சுற்றுவற்கு மாறாக எதிர்திசையில் ஆரத்தி சுற்றி உள்ளதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது. இதுதொடர்பாக ராகுல் காந்தி ஆரத்தி எடுத்த வீடியோவை பாஜகவின் சமூக வலைதள பிரிவு தேசிய தலைவர் அமித் மாளவியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

அறிவியல் காரணத்தை கூறி...
இதுதொடர்பாக அமித் மாளவியா, ‛‛ஆரத்தி என்பது கடிகார முள் சுற்றும் திசையில் மேற்கொள்ள வேண்டும். இதன் பின்னணியில் அறிவியல் ரீதியான காரணம் உள்ளது. அதாவது பூமியும் கடிகார முள் திசையில் தான் சுழல்கிறது. இந்த விஷயங்களை அறிந்திருந்தால் இதுபோன்று ராகுல் பொதுவெளியில் இந்த செயலை செய்திருக்க மாட்டார்'' என கூறியுள்ளார்.

அமித் மாளவியாவுக்கு எதிர்ப்பு
அமித் மாளவியாவின் இந்த பதிவை பார்த்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் நெட்டிசன்கள் கொதித்தெழுந்தனர். அமித் மாளவியாவின் பதிவுக்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதோடு அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். அதாவது ராகுல் காந்தி உண்மையில் சரியான திசையில் தான் ஆரத்தி செய்தார். ஆனால் அதனை வீடியோவில் பார்க்கும்போது எதிர்திசையில் இருந்து எடுப்பது போல் தெரிகிறது. இது கூட தெரியாமல் அமித் மாளவியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் என அவரை கடுமையாக தாக்கி கருத்துகள் பதிவிட்டனர்.

தவறு கண்டுபிடிக்க..
இதுதொடர்பாக கத்யூஷா என்பவர், ‛‛ராகுல் காந்தி கடிகார திசையில் தான் ஆரத்தி செய்கிறார். நீங்கள் எதிர்திசையில் இருந்து பார்க்கிறீர்கள். கோவிலில் இப்படித்தான் ஆரத்தி செய்யப்படுகிறது. அவர் செய்யும் அனைத்திலும் தவறை தேடுவதை நிறுத்திவிட்டு உங்களது முதலாளிகளிடம் இருந்து புதிய வேலைக்கான விபரங்களை பெறுங்கள். எப்போதும் அவரை ட்ரோல் செய்வதில் உங்களுக்கு சலிப்பு ஏற்படவில்லையா?'' என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

இன்னொருவரும் விமர்சனம்
Nehr_who? என்ற பயனாளர், ‛‛பூமி கடிகார திசையில் நகர்கிறது என யார் உங்களுக்கு சொன்னது?. இவ்வாறு நீங்கள் கூறியது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பூமியை வடதுருவத்தில் இருந்து பார்த்தால் கடிகார முள்ளுக்கு எதிரான திசையிலும்(இடமிருந்து வலம்), தென் துருவத்தில் இருந்து பார்த்தால் கடிகார முள் திசையிலும் (வலமிருந்து இடம்)பூமி சுழலும். அறிவியலை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்'' என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் வீடியோ
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேணுகா சவுத்ரி, பிரதமர் நரேந்திர மோடியும், ராகுல் காந்தியை போல் ஆரத்தி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளதோடு, இதை ஏன் நீங்கள் பிரதமர் மோடியிடம் சொல்லக்கூடாது'' எனக்கூறி விளாசி உள்ளதோடு, ராகுல் சரியான முறையில் ஆரத்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பதிவு
இதேபோல் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் ராகுல் காந்தி எதிர் திசையில் ஆரத்தி செய்ததாக கூறி ராகுலின் ஆரத்தி தொடர்பான படத்தை தலைகீழாக பதிவிட்டார். இதையடுத்து அவரையும் காங்கிரஸ் கட்சியினர், நெட்டிசன்கள் விடவில்லை. அவருக்கு எதிராகவும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications