பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரை சரியாக கணித்த ஜீனியஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுவார் என்று லலித் மிஸ்ரா என்பவர் சரியாக கணித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் சார்பில் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக தலைவர் அமித் ஷா கோவிந்தின் பெயரை அறிவிக்கும் முன்பு பத்திரிகையாளர் ஒருவர் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருப்பார் என்று ட்விட்டரில் கருத்துக் கணிப்பு நடத்தினார்.

BJP's presidential candidate: This man's prediction is true

அந்த கருத்துக்கணிப்பில் அவர் கோவிந்த் பெயரை குறிப்பிடவில்லை. இதை பார்த்த லலித் மிஸ்ரா என்பவர் கோவிந்தின் பெயரை பதிலாக கூறினார்.

அவர் கூறியது போன்றே கோவிந்த் தான் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவிந்த் பெயரை பாஜக அறிவித்தவுடன் ஆளாளுக்கு லலித் மிஸ்ராவை பாராட்டி வருகிறார்கள்.

கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் லலித் மிஸ்ரா நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A man named Lalit Misra has correctly predicted Bihar governor Ramnath Kovind as BJP's presidential candidate.
Please Wait while comments are loading...