திரிபுரா உள்ளாட்சித் தேர்தல்: பாஜக அமோக வெற்றி!
அகர்தலா: திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும்பான்மையான இடங்களை ஆளும் பாஜக கைப்பற்றி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.
திரிபுராவில் 3 அடுக்கு முறை உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் ஜூலை 27-ல் நடைபெற்று நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

உள்ளாட்சி தேர்தல்களில் 85% இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 15% இடங்களுக்குத்தான் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 833 கிராம பஞ்சாயத்துகள், 82 பஞ்சாயத்து சமிதிகள், 79 ஜில்லா பரிசத் இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
833 கிராம பஞ்சாயத்து இடங்களில் பாஜக 638, சிபிஎம் 22, காங்கிரஸ் 158 இடங்களில் வென்றன. திரிபுரா பழங்குடி இன மக்கள் கட்சி 6 இடங்களில் வென்றுள்ளது.
பஞ்சாயத்து சமிதிகளில் பாஜக 74 இடங்களிலும் சிபிஎம் ஒரே ஒரு இடத்திலும் காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றுள்ளன. ஜில்லா பரிசத்தில், பாஜக 77 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 2 இடங்களிதான் வென்றது.
கிராம பஞ்சாயத்துகளில் மொத்தம் 6,646 இடங்களில் பாஜக 5,652 இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தேர்தலில் மொத்தம் 76.63% வாக்குகள் பதிவாகி இருந்தன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications