For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2023 சத்தீஸ்கர் தேர்தல்: 'நோ' முதல்வர் வேட்பாளர்- பாஜக அறிவிப்பால் மாஜி முதல்வர் ராமன்சிங் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கப் போவது இல்லை என பாஜக மேலிடப் பொறுப்பாளரான புரந்தேஸ்வரி கூறியுள்ளார். அவரது இந்த அறிவிப்பால் முன்னாள் முதல்வர் ராமன்சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

2018 சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது. அதன்பின்னர் முன்னாள் முதல்வர் ராமன்சிங் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் 2019 லோக்சபா தேர்தலில் ராமன்சிங் மகன் அபிஷேக் உட்பட சிட்டிங் எம்.பிக்கள் யாருக்கும் சீட் தரப்படவில்லை.

சூப்பர்..! 5 ஆண்டுகளுக்கு பின் ஜெயலலிதா இருந்த.. அதே அப்பல்லோவில் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய சசிகலாசூப்பர்..! 5 ஆண்டுகளுக்கு பின் ஜெயலலிதா இருந்த.. அதே அப்பல்லோவில் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய சசிகலா

இந்த நிலையில் 2023-ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ.க. தயாராகி வருகிறது. பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் புரந்தேஸ்வரி சத்தீஸ்கர் தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

நோ முதல்வர் வேட்பாளர்

நோ முதல்வர் வேட்பாளர்

இதனிடையே, 2023 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என யரையும் அறிவிக்கப் போவது இல்லை. வளர்ச்சிதான் எங்களது முகம். வளர்ச்சியை முன்னிறுத்தியே சட்டசபை தேர்தலை சத்தீஸ்கரில் பாஜக சந்திக்கும் என்றும் புரந்தேஸ்வரி பேட்டி கொடுத்தார். அவரது இந்த பேட்டிதான் இப்போது சத்தீஸ்கர் பாஜகவில் பெரும் புகைச்சலை கிளப்பிவிட்டிருக்கிறது.

ராமன்சிங் தரப்பு அதிர்ச்சி

ராமன்சிங் தரப்பு அதிர்ச்சி

குறிப்பாக மூன்று முறை முதல்வராக இருந்த ராமன்சிங் தரப்பை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ராமன்சிங்குக்கு சத்தீஸ்கர் பாஜகவில் மிகப் பெரிய எதிர்ப்பு இல்லை. அதனால்தான் இயல்பாகவே ராமன்சிங் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றே அக்கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால் மேலிட பொறுப்பாளர் புரந்தேஸ்வரியின் அறிவிப்பு இப்போது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

ராமன்சிங்குக்கு ஓய்வு?

ராமன்சிங்குக்கு ஓய்வு?

68 வயதாகும் ராமன்சிங் ஆக்டிவ் அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என பாஜக மேலிடம் கருதுவதாகவே தெரிகிறது. இதனால் வழக்கம் போல பாஜகவில் மூத்தவர்களுக்கான வழிகாட்டுதல் குழு உறுப்பினராக்கப்பட்டு ராமன்சிங்கின் அரசியல் அத்தியாயம் முடித்து வைக்கப்படலாம் என்கிற ஒரு கருத்து நிலவுகிறது. இன்னொருபக்கம், ராமன்சிங்கை விட இளைஞர்களுக்கு வாய்ப்பு தரலாம் என பாஜக மேலிடத் தலைமை கருதி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

புதிய முதல்வராக யாருக்கு வாய்ப்பு?

புதிய முதல்வராக யாருக்கு வாய்ப்பு?

இருந்தபோதும் ராமன்சிங்கையே பெரும்பாலான பாஜக நிர்வாகிகள் இதுவரை ஆதரித்து வருகின்றனர். தற்போது ராமன்சிங் முதல்வர் வேட்பாளர் இல்லை என்கிற நிலை வரும் போது புதிய முதல்வர் வாய்ப்பு யாருக்கு என்கிற விவாதம் எழுந்திருக்கிறது. சத்தீஸ்கரில் ராமன்சிங் எதிர்ப்பு அணி தலைவராக முன்னாள் அமைச்சர் அஜய் சந்திரசேகரா பார்க்கப்படுகிறார். இருந்தபோதும் 15 ஆண்டுகளுக்கு முந்தைய வலிமையான பாஜக இப்போது சத்தீஸ்கரில் இல்லை என்கிற கருத்து நிலவுகிறது. இதனால் சட்டசபை தேர்தலில் கடும் போட்டியைத்தான் எதிர்கொள்ள நேரிடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

English summary
BJP's Chhattisgarh in-charge D. Purandeshwari said that their party will fight the 2023 state Assembly elections with the the issue of development and no Chief Ministerial face will be projected,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X