கருப்புப் பணம்: சிக்கியது 627 "முதலைகள்" என்றாலும் வெறும் 27 பேரைத்தான் விசாரிக்கப் போகிறார்களாம்!
டெல்லி: 627 பேர் கொண்ட கருப்புப் பண முதலைகள் பட்டியலில் 27 பேரிடம் மட்டுமே விசாரணை நடத்தப்படவுள்ளதாம். மேலும் இவர்களிடமிருந்து மத்திய அரசால் அதிகபட்சம் ரூ. 750 கோடி மட்டுமே வசூலிக்க முடியுமாம். இந்த 27 பேரிடமும் அடுத்த மாதத்திலிருந்து விசாரணை தொடங்கவுள்ளதாம்.
மத்திய அரசு கொடுத்துள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள 289 பேரின் வங்கிக் கணக்கில் சுத்தமாக பணம் இல்லையாம். இவர்கள் ஜெனீவாவில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.
13 கணக்குகள் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் சார்ந்ததாகும். 315 கணக்குகள் விரிவிதிப்புக்கு உட்பட்டவையாக உள்ளவையாகும்.

136 பேர் உரிய வரிகளைச் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளனராம். எனவே அரசுக்கு கிடைக்கப் போகும் வருவாய் என்பது வெறும் ரூ. 750 கோடியாகும்.
இந்த 627 பேரும் எச்எஸ்பிசி வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் ஆவர்.
இவர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் மத்திய அரசு சீலிட்ட கவரில் வைத்து உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அனைவரின் பெயர் விவரங்களை சுப்ரீம் கோர்ட் வெளியிடவில்லை.
இருப்பினும் இந்தப் பெயர்ப் பட்டியல் அடங்கிய கவரை, உச்சநீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழுவினர் பிரித்துப் பார்த்து மேல் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். இந்தக் குழுவின் தலைவராக எம்.பி. ஷா உள்ளார். துணைத் தலைவராக அரிஜித் பச்சாயத் இருக்கிறார். இருவரும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆவர்.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications