ஜம்மு காஷ்மீரில் குண்டுவெடிப்பு.. 4 போலீசார் வீரமரணம்!
ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 4 போலீசார் வீர மரணமடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 4 போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தின் சோப்பூர் பகுதியில் ஐஇடி குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகள் நடத்திய இந்த வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி 4 போலீசார் வீரமரணம் அடைந்துள்ளனர்.

மேலும் ஒரு காவலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றார். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சோப்பூர் பகுதியில் ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி, டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications