For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.23-ல் தொடக்கம் - பிப்.26-ல் ரயில்வே, 28-ல் பொதுபட்ஜெட்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 23-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தொடரில் பிப்ரவரி 26-ந் தேதி ரயில்வே பட்ஜெட்டும் 28-ந் தேதி பொதுபட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.

டெல்லியில் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை இரு பகுதிகளாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

பிப்ரவரி 23-ந் தேதி முதல் மார்ச் 20-ந் தேதி வரை ஒரு பகுதியாகவும் பின்னர் ஏப்ரல் 20-ந் தேதி முதல் மே 8-ந் தேதி வரை 2வது பகுதியாகவும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Budget Session of Parliament Begins on February 23

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். பின்னர் 26-ந் தேதியன்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 27-ந் தேதியன்று பொருளாதார ஆய்வறிக்கையையும் 28-ந் தேதியன்று பொதுபட்ஜெட்டையும் தாக்கல் செய்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்ய இருக்கும் முதலாவது முழு அளவிலான பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Budget session of Parliament will begin on February 23 and the Narendra Modi government will present its first full year Budget on Saturday, February 28.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X