சிறுமி, தாய் பலாத்காரம்.. கண்டபடி கருத்து கூறிய உ.பி அமைச்சர் மீது சுப்ரீம்கோர்ட் பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பலாத்காரம் குறித்து உத்தரபிரதேச அமைச்சர் ஆசம்கான் கூறிய கருத்துக்கு சுப்ரீம் கோர்ட் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

மேற்கு உத்தரபிரதேசத்தின் சஹ்ஜககன்புர் பகுதியில் காரில் பயணித்த 13 வயது சிறுமியையும், அவரது தாயையும் வெளியே இழுத்து சென்று 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.

Bulandshahr rape remark- SC pulls up Azam Khan

இந்நிலையில், உத்தரபிரதேச அமைச்சர் ஆசம் கான் நிருபர்களிடம் கூறுகையில், இது அரசுக்கு எதிரான சதி சம்பவம் என கூறியிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இனிமேலும் உத்தரபிரதேசத்தில் வழக்கு நடந்தால் தங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை என கூறினர்.

மேலும், ஆசம்கான் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தனர். இதுகுறித்து, விசாரித்த சுப்ரீம்கோர்ட், ஆசம்கான் போன்ற அரசியல்வாதிகள் கருத்து வழக்கின் போக்கை திசை திருப்பிவிடும் என்றும், தனது கருத்து குறித்து கோர்ட்டில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் எந்றும் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Supreme Court today pulled up Uttar Pradesh minister for his comments on the Bulandshahr rape case. The Supreme Court observed that statements issued by political leaders such as Azam Khan create mistrust in the entire system and also the ongoing investigation.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற