For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோயா மரண வழக்கில் சிறப்பு விசாரணை வேண்டாம் என சுப்ரீம் கோர்ட் சொல்ல காரணம் என்ன?

நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை வேண்டாம் என்பதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டிய காரணங்கள் இவைதான்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    நீதிபதி லோயா மரணம் இயற்கையானது-உச்சநீதிமன்றம்- வீடியோ

    டெல்லி : நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை வேண்டாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கான காரணங்கள் என்ன?. மனுவை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டிய காரணங்கள் இவை தான்.

    Bullet points of top court rejected SIT for Justice Loya death case

    உச்சநீதிமன்ற தீர்ப்பில் முக்கிய அம்சங்கள்:

    • நீதிபதி லோயா மரணம் தொடர்பாக விசாரணை தேவையில்லை
    • சிறப்பு விசாரணை கோரும் மனுவில் உண்மைத் தன்மை இல்லை நீதித்துறையை களங்கப்படுத்தும் உள்நோக்கமே உள்ளது.
    • நீதிபதி லோயா இயற்கையாகத் தான் மரணமடைந்திருக்கிறார் இதில் எந்த சந்தேகமும் இல்லை.
    • யாருக்கும் பயந்து நீதித்துறையின் செயல்பாடுகள் இல்லை. நீதிமன்ற நடைமுறைகளை பின்பற்றியே வழக்கின் விசாரணையானது நடக்கிறது.
    • மனுதாரரின் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, இந்திரா ஜெய்சிங் மற்றும் பிரஷாந்த் பூஷன் உள்ளிட்டோர் நீதித்துறையின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். நாக்பூரில் 3 நீதித்துறை அதிகாரிகள் அவருடன் இருந்துள்ளனர் அவர்கள் லோயா மாரடைப்பு ஏற்பட்டு தான் உயிரிழந்தார் என்று கூறியுள்ளனர், ஆனால் அவர்களின் கூற்றை பொய் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
    • வழக்கு விவாதத்தின் போது வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு நிர்வாக ரீதியில் கொடுக்கும் மாண்பை கூட அளிக்காமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
    • அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யும் மனுதாரர்களுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கைகளை தொடங்குவதற்கு இது சிறந்த உதாரணம், மேலும் நீதிமன்றம் மூலம் நீதித்துறையின் மீது தீய நோக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி
    • பொதுநல மனுக்கள் குரலற்றவர்களுக்கு நீதியை தேடித்தருவதாக இருந்தது, ஆனால் தற்போது வியாபார ரீதியான பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளவும், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு தீர்வு காணவும் பயன்படுத்தப்படுகிறது.
    • நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டுகள் "நீதித்துறை மீது நடத்தும் அவதூறு தாக்குதல்."
    • சமீப காலங்களாக மலை போல பொதுநல மனுக்கள், அரசியல் லாபத்திற்காகவும், வியாபார நோக்கங்களை பூர்த்தி செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. நீதித்துறையும் தேவையின்றி தனது விலைமதிக்க முடியாத நேரத்தை இது போன்ற பொதுநல மனுக்களுக்காக வீணாக செலவிட நேரிடுகிறது இதனால் மற்ற வழக்குகளில் தீர்ப்பு வழங்குவது காலதாமதமாகிறது.
    • இந்த பொதுநல மனு நீதித்துறையின் செயல்பாடுகளைவும் நேரத்தையும் வீணடித்துள்ளது. லோயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொல்வதில் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. இந்த விவகாரத்தில் நீதித்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கைகள் அனைத்தும் தெளிவாகவும் திருப்திகரமாகவும் உள்ளது.
    • நீதிபதி லோயா விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட போது, நாளிதழ்களும், வாரப்பத்திரிக்கைகளும் நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான திட்டமிட்ட தகவல்களை பரப்பின.
    • இது முற்றிலும் அற்பத்தனமான ஒரு மனு, நீதித்துறையை சிறுமைப்படுத்துவதற்காகவே இந்த மனுவானது திட்டமிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த காரணங்களுக்காகவே இந்த மனுவானது தள்ளுபடி செய்யப்படுகிறது. ரவி பவனில் நண்பர்களும் உடன் பணியாற்றுபவர்களும் அறையை பகிர்ந்து கொண்டதில் எந்த தவறும் இல்லை. நவம்பர் 30ம் தேதி நீதிபதி லோயா தனது மனைவியை தொடர்பு கொண்டு தான் ரவி பவனில் நண்பர்களுடன் தங்கி இருப்பதாகக் கூறி இருப்பதையும், சக நீதித்துறை அதிகாரிகள் அவரின் மரணம் குறித்து அளித்த அறிக்கையையும் மறுக்க முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

    English summary
    Why Supreme court rejects the PIL's seeking SIT for justice Loya death case, here are some of the observations and also the top court nailed PILS are nowadays filing to settle business and political scores and the judiciary is unnecessarily made to spend precious time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X