For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் ஒரு கிளையன்ட் தான்- வெளிவரும் அனாலிட்டிகா உண்மைகள்!

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவிடம் இருந்து நித்திண்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தகவல் சேகரித்ததாக முன்னாள் ஊழியர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவின் முன்னாள் ஊழியர் கிறிஸ்டோபர் வொய்லி முகநூல் தகவல்கள் வெளியானது குறித்து மேலும் ஒரு அதிர்ச்சியான விஷயத்தை வெளியிட்டுள்ளார். பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2010ல் நடந்த சட்டசபை தேர்தலுக்காக தகவல்களைப் பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

கிறிஸ்டோபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் கடந்த சில ஆண்டுகளாக முகநூல் விவரங்கள் அடிப்படையில் தகவல்களை சேகரிக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள் என்ன என்பதை வெளியிட்டுள்ளார். இதன் படி எஸ்சிஎல் க்ரூப் என்ற நிறுவனம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து செயலாற்றியதாக தெரிவித்துள்ளார். எஸ்சிஎல் தேர்தல் கள ஆய்வு நடத்துவதற்காக தகவல்களை கோரியது, அதன் படி சட்டசபை தேர்தலுக்கான வியூகங்களை அந்த கட்சிக்கு அமைத்து கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

CA Whistleblower Christopher Says JD(U) Was a Client Too

எஸ்சிஎல் 75 சதவீத வீடுகளை குறிவைத்து ஒரு ஆய்வை நடத்தியது. மக்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டம், எந்த சாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர், அவர்களின் தேவைகள் என்ன உள்ளிட்ட விவரங்களை சேகரித்துக் கொடுத்தது. அதன் அடிப்படையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தேர்தல் பிரச்சாரம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா செய்த செயல்கள் குறித்து தொடர்ந்து என்னிடம் கேட்டு வருகின்றனர். இதனால் எஸ்சிஎல்/சிஏவின் சில செயல்களை மட்டுமே நான் இங்கு அட்டவணையுடன் வெளியிட்டுள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

என்னிடம் அடிக்கடி எழுப்பப்படும் கேள்வி இந்தியாவில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா அலுவலகம் இருந்ததா என்பதே. ஆம் இந்தியாவில் ஒரு அலுவலகம் இருந்து செயல்பட்டது என்றும் கிறிஸ்டோபர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Christopher Wylie, the former employee of Cambridge Analytica says Nitish Kumar’s Janata Dal (United) had employed the services of the data firm’s parent company, SCL group, for the 2010 Assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X