For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவி சமைக்காததற்கு எல்லாம் விவாகரத்து கொடுக்க முடியாது.. மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

மனைவி சமைக்காததை காரணம் காட்டி விவாகரத்து வழங்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் விவாகரத்து வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

மும்பை: மனைவி சமைக்காததை காரணம் காட்டி விவாகரத்து வழங்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் விவாகரத்து வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

மும்பையை சேர்ந்த மனோகர் ஜாதவ் என்பவர் தன்னுடைய மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். அதில் தன்னுடைய மனைவி தனக்கு சரியாக உணவு சமைத்து கொடுப்பதில்லை, அடிக்கடி சண்டைபோடுகிறார் என்று குற்றச்சாட்டு வைத்து இருந்தார்.

Cant give divorce to a wife for not cooking says Mumbai HC

மேலும் கேட்கும் நேரத்தில் சாப்பாடு போடாமல் கொடுமைப்படுத்துகிறார், இதனால் என்னுடைய அம்மாவும் அதிகமாக கஷ்டப்படுகிறார் என்று குற்றச்சாட்டு வைத்து இருந்தார். ஆனால் இதற்கு மும்பை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து மனோகர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சமையல் செய்யாதது, சண்டை போடுவது உள்ளிட்டவைகளை சித்ரவதையாக கொள்ள முடியாது, இதற்கெல்லாம் விவாகரத்து வழங்க முடியாது என்று கூறியுள்ளனர்.

சிறிய சிறிய கணவன் மனைவி சண்டை, சாப்பாடு சரியில்லை போன்ற விஷயங்களுக்கு விவாகரத்து வழங்க முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளார்.

English summary
Can't give divorce to a wife for not cooking says Mumbai High Court to man named Manohar in a divorce case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X