தேர்தலுக்கு பிந்தைய கலவரம்; மேற்கு வங்க டிஜிபியிடம் தகவல்களை கேட்கிறது சிபிஐ
கொல்கத்தா : மேற்குவங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின் போது பதிவான அனைத்து கொலை, கொலை முயற்சி மற்றும் பலாத்கார வழக்குகள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு சிபிஐ மேற்கு வங்க காவல் துறை தலைமை இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி வெளியாகியது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மே 2 ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்குப் பிறகு மிகப்பெரிய அரசியல் வன்முறை ஏற்பட்டது. கொலை,, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது. இந்த வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் . மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின் போது பெண்களுக்கு எதிரான கொலைகள், பலாத்காரம் மற்றும் குற்றங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து கொலை, பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறையின் போது பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பான வழக்குகளின் விவரங்களை மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குனருக்கு சிபிஐ கடிதம் அனுப்பி உள்ளது.
மேற்கு வங்கத்தின் அரசியல் வன்முறையை விசாரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தலா 4 குழுக்களை இணை இயக்குநர்கள் ராம்நிஷ், அனுராக், வினீத் விநாயக் மற்றும் சம்பத் மீனா தலைமையில் அமைத்துள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு துணை ஆய்வாளர் ஜெனரல் மற்றும் சுமார் நான்கு காவல்துறை கண்காணிப்பாளர்கள் இருப்பார்களாம். ஒட்டுமொத்த விசாரணையை கூடுதல் இயக்குனர் அஜய் பட்னாகர் கண்காணிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications