ஜிஎஸ்டி பற்றி சந்தேகமா.. விளக்கம் அளிக்க கட்டுப்பாட்டு அறை... மத்திய அரசு ஏற்பாடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜிஎஸ்டி வரி என்றால் என்னவென்று பொதுமக்கள் தெரிந்து கொள்ள மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்க சிறப்புக் கட்டுப்பாட்டு அறை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சக வட்டார அதிகாரிகள் சிலர் கூறுகையில், '' ஜிஎஸ்டி அமலுக்கு வர இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ளன. அதனால் வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஜிஎஸ்டி பற்றி நிறைய சந்தேகம் எழுந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன.

Centarl Government sets up special war room to deal with GST queries

இந்நிலையில், ஜிஎஸ்டி பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக, சிறப்பு கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தியுள்ளோம். இந்த அறை, தினசரி காலை 8 மணி முதல், இரவு 10 மணி வரை இயங்கும்,'' என்றனர்.

மேலும், மத்திய அமைச்சரவை துறைகளும், ஜிஎஸ்டி பற்றி விளக்கம் அளிப்பதற்காக, சிறப்பு விளக்கப் பிரிவுகளை தொடங்கியுள்ளன. துறைமுகங்களில், சுங்கத்துறை அதிகாரிகள், இதற்கான சந்தேகங்களை விளக்கும் சேவைகளை மேற்கொண்டுள்ளனர்.

துறைமுகங்களில் இறக்குமதி, ஏற்றுமதி செய்பவர்களுக்குப் புதிய விதிமுறைகள்படி கட்டணம் செலுத்துவது பற்றி பயிற்சி அளிக்கப்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று அவர்கள் கூறினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Central Government sets up special war room to deal with GST queries said a senior government official.
Please Wait while comments are loading...