ஜெ. நினைவிடத்தில் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் மலர் தூவி அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் நேரில் மலர் தூவி மரியாதைச் செலுத்தினர்.

ஜி.எஸ்.டி. தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு சென்னை வந்த அருண் ஜெட்லி, அடையாறில் நடைபெற்ற தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினார்.

 Center ministers Arun jaitley and Nirmala sitharaman Tribute at Jayalalithaa Memorial

இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரைக்குச் சென்றார் அருண் ஜெட்லி. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா நினைவிடத்தை மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி சுற்றி வலம் வந்தார். பத்து நிமிடங்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்த பிறகு அவர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Center ministers Arun jaitley and Nirmala sitharaman Tribute at Jayalalithaa Memorial Today at Merina Beach Chennai.
Please Wait while comments are loading...