For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

படுவேகமாக சரியும் பாஜக செல்வாக்கு.. மார்ச், ஏப்ரலில் லோக்சபாவுக்கு திடீர் தேர்தல்?

லோக்சபாவுக்கு திடீர் தேர்தலை நடத்தலாமா என்பது குறித்து பாஜக விவாதித்து வருவதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    பாதாளத்திற்கு செல்லும் பாஜகவின் செல்வாக்கு....விரைவிலேயே தேர்தல் ?- Oneindia Tamil

    டெல்லி: பாஜகவின் செல்வாக்கு படுவேகமாக சரிவதால் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமே லோக்சபா தேர்தலை நடத்துவது குறித்து பாஜக திடீரென ஆலோசனை நடத்த தொடங்கியிருப்பது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    2014 லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களைக் கைப்பற்றி மத்தியில் வலிமையாக உட்கார்ந்தது. வரலாறு காணாத வகையில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் போனது. அதிமுக இந்தியாவின் 3-வது மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்தது.

    ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் பாஜகவின் வெறுப்பு அரசியல், வன்முறை வியூகங்களால் மக்கள் மிகவும் உச்சகட்ட அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் பாஜகவால் கனவிலும் காலே ஊன்ற முடியாத அளவுக்கு துரோகத்தை செய்து வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ளது.

    கர்நாடகாவில்...

    கர்நாடகாவில்...

    5 முறை வென்ற குஜராத் சட்டசபை தேர்தலிலும் கூட 'மரண பயத்தை' பார்த்தது பாஜக. இனி வரப்போகிற கர்நாடகா சட்டசபை தேர்தலில் நிலைமை படுகேவலமாகத்தான் இருக்கும் என்பதை பாஜக உணர்ந்தே இருக்கிறது.

    பீதியில் பாஜக

    பீதியில் பாஜக

    அத்துடன் பாஜக மேலிடத் தலைவர்கள் கணிப்பின்படியே இப்போது தேர்தல் நடந்தாலே பாஜகவால் 200 முதல் 210 தொகுதிகள்தான் கிடைக்கும் என்கின்றனர். அப்படியானால் இன்னும் ஓராண்டு கழித்து தேர்தல் எனில் அதோ கதிதான் என்கிற பீதி பாஜக மேலிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

    சட்டசபை தேர்தல்களுடன் சேர்த்து

    சட்டசபை தேர்தல்களுடன் சேர்த்து

    இதையடுத்தே லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்த வாதங்களை பாஜக வட்டாரங்கள் நடத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாகத்தான் சட்டசபைகளுக்கும் லோக்சபாவுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்கிற கருத்தும் பரவவிடப்படுகிறது.

    ஆட்சியை தக்க வைக்க

    ஆட்சியை தக்க வைக்க

    தேர்தல் செலவைக் குறைக்க சட்டசபைக்கும் லோக்சபாவுக்கும் ஒரே நேரத்தில் நடத்தலாம் என்பது உண்மை அல்ல. எவ்வளவு வேகமாக தேர்தலை நடத்தி அறுவடை செய்யலாம்? ஆட்சியில் நீடிக்கலாம் என்பதற்காகத்தான் பாஜக இப்படியான நூல்விடுதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதே டெல்லி நிலவரம்.

    English summary
    According to the sources, BJP is planning to hold the Lok Sabha poll with the upcoming Assembly Elections in March or April 2018.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X