Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: தமிழகத்தில் நிலவி வரும் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இப்போது பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை அடியோடு முடக்கிபோட்டுள்ளது.. ஓட்டல்கள் முதல் ஆட்டோ போக்குவரத்து வரை அனைத்தும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் விநியோக கால அளவு திடீரென 28 நாட்களாக உயர்த்தப்பட்டிருப்பது, சாமானிய மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை ஒரு பெரும் கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு, பொதுமக்களின் அன்றாட வாழ்வியலை முற்றிலுமாக புரட்டிப் போட்டுள்ளது.

LPG Gas Booking Rule Crisis

குறிப்பாக தலைநகர் சென்னையில் இந்த பாதிப்பு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இல்லத்தரசிகள் முதல் சிறு குறு தொழிலாளர்கள் வரை அனைவரும் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்..

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் தரப்பில் கசிந்துள்ள தகவல்கள், இந்த நெருக்கடி இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதையே பறைசாற்றுகின்றன.

சாதாரண நேரங்களில் ஒரு சிலிண்டருக்கும் அடுத்த சிலிண்டருக்கும் இடையிலான பதிவு இடைவெளி 21 நாட்களாக இருந்த நிலையில், இப்போது அது அதிரடியாக 28 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இந்த கால நீட்டிப்பு என்பது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.

சிலிண்டர் பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள இந்த நடைமுறை மாற்றம் ஒருபுறமிருக்க, பதிவு செய்த பிறகும் சிலிண்டர் கைக்கு வந்து சேர குறைந்தது 4 முதல் 5 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறதாம். தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வந்த சூழலில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் கட்டுப்பாடுகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது.

சமையல் சிலிண்டர் பதிய 28 நாட்கள்?

முன்னதாக 25 நாட்களாக இருந்த இந்த காத்திருப்பு காலம், இந்த கால தாமதம் காரணமாக 28 நாட்களாக மாற்றப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிலிண்டர் தீர்ந்த பிறகு அடுத்த சிலிண்டருக்குக் காத்திருக்கும் அந்த இடைப்பட்ட நாட்களில், மாற்று எரிபொருளைத் தேடி மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

இந்த தட்டுப்பாட்டின் நேரடி தாக்கம் தமிழகத்தின் அடையாளமாக விளங்கும் உணவகத் தொழிலை வெகுவாகப் பாதித்துள்ளது. குறிப்பாக காலை நேர உணவுகளான இட்லி, தோசை தயாரிப்பில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பல சிறிய வகை ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் மாவு இருந்தும், அதை சமைப்பதற்கான எரிவாயு இல்லாததால் வியாபாரம் முடங்கியுள்ளது.

தமிழகத்தில் இட்லி, தோசை தட்டுப்பாடு?

இதனால் பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய உணவுகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் சார்ந்திருக்கும் உணவகங்களில் கூட ஸ்டாக் இல்லை என்ற பலகையைப் பார்க்கும் அவலநிலை சென்னை போன்ற மாநகரங்களில் அரங்கேறி வருகிறது.

உணவுத் துறை மட்டுமின்றி, போக்குவரத்துத் துறையிலும் இந்த எரிவாயு தட்டுப்பாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள எல்பிஜி காஸ் நிரப்பும் மையங்கள் பல இடங்களில் மூடப்பட்டுள்ளதால், எரிவாயு மூலம் இயங்கும் ஆட்டோக்கள் சாலையில் ஓட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

எரிவாயு நிரப்ப வரிசையில் காத்திருந்தும் பலன் கிடைக்காமல் ஆட்டோக்கள் முடங்கிக் கிடப்பது, பொதுமக்களின் போக்குவரத்தையும் சிக்கலாக்கியுள்ளது. எரிவாயு நிறுவனங்களின் இந்த திடீர் கட்டுப்பாடு மற்றும் விநியோகத் தாமதம் எப்போது சீராகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வராத நிலையில், ஒட்டுமொத்த தமிழகமும் அடுப்பு எரியுமா என்ற கவலையில் ஆழ்ந்துள்ளது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+