ஓஹோ.. இப்டி ஒரு லிஸ்டே இருக்கா? காங்கிரஸிலிருந்து விலகி வடகிழக்கு மாநில பாஜக முதலமைச்சரானவர்கள்
அகர்தலா: திரிபுரா மாநில புதிய முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ள மாணிக் சஹா இதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வகித்தவர்.
இப்படி வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்களுக்கு முதலமைச்சர் பதவியை அக்கட்சி வழங்கி இருக்கிறது.
திமுக நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் காப்பு! சினிமா சூட்டிங் பணம் மூலம் நூதனமான சதுரங்க வேட்டை!
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது. அங்கு முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பிப்லப் தேப் குமார் நேற்று ராஜினாமா செய்தார்.

மானிக் சின்ஹா
பிப்லப் குமார் தேபுக்கு மாற்றாக பாஜக தலைமையால் திரிபுரா மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு இருப்பவர் மானிக் சின்ஹா. இவர் கடந்து 2016 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தவர்.2020 ஆம் ஆண்டு கட்சியின் மாநில தலைவராக மானிக் சின்ஹாவை அறிவித்த பாஜக தலைமை, மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமித்தது. தற்போது அவரை முதலமைச்சராக பாஜக தலைமை அறிவித்து இருக்கிறது.

ஹிமந்தா பிஸ்வா சர்மா
பாஜகவின் மாநில முதலமைச்சர்களில் அதிரடியானவர் என்ற பெயரை பெற்று வருகிறார் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. அம்மாநில முதலமைச்சராக இருந்த சர்பானந்தா சோனோவாலுக்கு மாற்றாக நியமிக்கப்பட்ட ஹிமந்தா பிஸ்வா சர்மா கடந்த 2015 ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர். 5 முறை எம்.எல்.ஏவான இவர், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அசத்தினார்.

பிரேன் சிங்
மணிப்பூர் மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த பிரேன் சிங் 2016 ஆம் ஆண்டில் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் ஐக்கியமானார். அடுத்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றார். இதன் மூலம் மணிப்பூரில் பாஜகவை சேர்ந்த முதலாவது முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றார்.

நெய்பியு ரியோ
நாகாலாந்து மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டவர் என்ற புகழுக்கு சொந்தக்காரர் நெய்பியு ரியோ. ஆனால், கட்சிதான் வேறு வேறு. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக திகழ்ந்த ரியோ 2002 ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி நாகா மக்கள் முன்னணியில் இணைந்தார். 2008 ஆம் ஆண்டு முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட அவர், 2013லும் வென்றார். 2018 ஆம் ஆண்டு நாகா மக்கள் முன்னணி பாஜக கூட்டணியிலிருந்து விலகியதை தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சரானவர் நெய்பியூ ரியோ.