For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பலாத்காரம் செய்யப்பட்டு நீதி மறுப்பு: சுப்ரீம் கோர்ட்டில் விஷம் குடித்த பெண் வக்கீல்

By Siva
Google Oneindia Tamil News

Chhattisgarh lawyer attempts suicide in Supreme Court, says was gang-raped
டெல்லி: தான் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறி சத்தீஸ்கரைச் சேர்ந்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை செய்ய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் தன்னை தனது உறவினர்கள் சேர்ந்து கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்திற்கு வந்த அவர் தனக்கு நீதி மறுக்கப்பட்டுவிட்டதாகக் கூறி விஷத்தை குடித்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த வழக்கறிஞர் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
A Chhattisgarh woman lawyer attempted to commit suicide in the apex court premises saying thar she was gang-raped by her releatives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X