For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

826 கிமீ தூரம்.. முழுக்க முழுக்க போர் விமானங்கள், டேங்குகளை குவித்த சீனா.. லடாக்கில் மோசமான நிலை

Google Oneindia Tamil News

லடாக்: லடாக்கின் எல்லையில் சுமார் 826 கிமீ தூரத்திற்கு சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இந்தியா நினைத்ததை விட சீனா அதிக அளவு படைகளை குவிக்க தொடங்கி உள்ளது.

Recommended Video

    Tank மற்றும் போர் விமானங்களை எல்லையில் குவிக்கும் China... என்ன நடக்கிறது?

    இந்தியா - சீனா இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. லடாக் எல்லையில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த மே 5ம் தேதி சிறிய மோதலாக தொடங்கிய சண்டை தற்போது விஸ்வரூபம் எடுத்து உள்ளது.

    இந்த நிலையில் கடந்த வாரம் புதன் கிழமை நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். கல்வான் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு பகுதி 14ல் நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    லடாக் எல்லையில் 40 சீன வீரர்களை கொன்றது இந்தியா.. மறைக்கிறது சீனா.. மத்திய அமைச்சர் லடாக் எல்லையில் 40 சீன வீரர்களை கொன்றது இந்தியா.. மறைக்கிறது சீனா.. மத்திய அமைச்சர்

    சீனா என்ன செய்கிறது

    சீனா என்ன செய்கிறது

    இந்த நிலையில்தான் தற்போது எல்லையில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. அதன்படி தொடக்கத்தில் கல்வான் பகுதியில் மட்டும்தான் சீனா தனது படைகளை குவித்தது. ஆனால் தற்போது கல்வான் பகுதி மீது மட்டுமின்றி தற்போது பாங்காங் திசோ பகுதி மீதும் சீனா தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் அங்கு இருக்கும் கட்டுப்பாட்டு பகுதி 4-8 வரை சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது.

    என்ன நிலைமை

    என்ன நிலைமை

    மொத்தம் இந்தியா - சீனா இடையே உள்ள 3488 கிமீ பகுதியில் மொத்தம் 826 கிமீ பகுதியில் தற்போது சீனா படைகளை குவித்து வருகிறது. இந்த இடம் முழுக்க முழுக்க லடாக் அருகே இருக்கும் எல்லை பகுதிகள் ஆகும். இங்கு சீனாவின் நவீன போர் விமானங்கள், வெடிகுண்டுகள், அதி நவீன துப்பாக்கிகள், ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.

    எந்த இடத்தில்

    எந்த இடத்தில்

    அதன்படி லடாக்கில் எல்லையில் இருக்கும் ஹோட்டன், இங்யாரி, சிங்ட்ஸ்சே, நிங்யின்சி ஆகிய இடங்களில்தான் படைகளை குவித்து வருகிறது. இந்த இடங்கள் லடாக் எல்லையில் இருக்கும் பகுதிகள் ஆகும். இதில் சில இடங்கள் அருணாசலப்பிரதேசம் மற்றும் சிக்கிம் பகுதிக்கு கீழும் வருகிறது. ஆனால் இது சீனாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வரும் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குதான் சீனா படைகளை குவித்துள்ளது.

    இந்தியாவும் படைகள்

    இந்தியாவும் படைகள்

    இன்னொரு பக்கம் இந்தியாவும் படைகளை குவித்து வருகிறது. இந்தியா அதிகம் கவனம் செலுத்துவது பாங்காங் திசோ, கல்வான், ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகள் ஆகும். அதேபோல் முற்கோ, தெஸ்பாங், கோயல், புக்சி, டெம்சாக் பேஸ் ஆகிய இடங்களிலும் இந்தியா தொடர்ந்து படைகளைய் குவித்து வருகிறது. இந்த இடங்களில்தான் இந்தியா தொடர்ந்த படைகளையும், ஆயுதங்களையும் குவித்து வருகிறது.

    இந்திய ஆயுதங்கள்

    இந்திய ஆயுதங்கள்

    இந்திய தரப்பில் எல்லையில் அப்பாச்சி ஹெலிகாப்டர் களமிறக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுகோய் ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்தியா தனது டேங்குகளையும் கூட எல்லையில் களமிறக்கி இருக்கிறது. அதேபோல் அங்கு 14000 அடி உயரத்தில் இந்தியா விமானங்கள் மூலம் ரோந்து பணிகளையும் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    China standoff with India: Both sides increased vigil and forces deployment in border areas.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X