For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரர்களுக்கு முழு சுதந்திரம்.. விதிமுறையில் மாற்றம்.. கமாண்டர்களுக்கு "ஃப்ரி ஹேண்ட்" கொடுத்த இந்தியா

Google Oneindia Tamil News

லடாக்: இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கு இந்திய ராணுவம் முழு சுதந்திரம் அளித்துள்ளதாக தகவல்கள் வருகிறது.

லடாக் எல்லை பிரச்சனை இப்போதைக்கு முடிவது போல தெரியவில்லை. மிக முக்கியமாக பேச்சுவார்த்தை மூலம் இந்த சண்டை முடிய வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள். லடாக்கில் நடந்த 20க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது.

நரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி.. லடாக் கட்டுரையை ஷேர் செய்து ராகுல் காந்தி பகீர் டிவிட்.. பின்னணி நரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி.. லடாக் கட்டுரையை ஷேர் செய்து ராகுல் காந்தி பகீர் டிவிட்.. பின்னணி

முழு சுதந்திரம்

முழு சுதந்திரம்

இதையடுத்து இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கு இந்திய ராணுவம் முழு சுதந்திரம் அளித்துள்ளதாக தகவல்கள் வருகிறது. அதன்படி இந்திய ராணுவம் முக்கியமான சில உத்தரவுகளை எல்லையில் இருக்கும் படைகளுக்கு அளித்துள்ளது. எல்லையில் சீனா அத்துமீறினால் காமாண்டோ வீரர்கள் துணிச்சலாக சுதந்திரமாக முடிவுகளை எடுக்கலாம்.

என்ன சூழ்நிலை

என்ன சூழ்நிலை

எல்லையில் நிலவும் சூழ்நிலையை பொறுத்து அவர்கள் முடிவுகளை எடுக்கலாம். மேலிடத்தின் உத்தரவு வரும் வரை காத்திருக்க வேண்டாம். உங்கள் மேலதிரிகரிகளின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டும். தேவையான நேரத்தில் தேவையான முடிவுகளை எடுக்க முழு சுதந்திரம் உங்களுக்கு வழங்கப்படுகிறது. எல்லையில் சீனா அத்துமீறினால் உடனடியாக அதற்கு இந்திய வீரர்கள் திருப்பி பதிலடி கொடுக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

எந்த இடம்

எந்த இடம்

கல்வான் பகுதியில் கடந்த வாரம் நடந்த சண்டையில் சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அங்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்த இந்திய வீரர்கள் சென்றனர். ஆனால் சீனா கொஞ்சமும் எதிர்பார்க்காமல் இந்திய வீரர்களை தாக்கியது. திட்டம் போட்டு மிக மோசமான அந்த தாக்குதலை இந்திய வீரர்கள் மீது சீனா நிகழ்த்தியது. இதனால்தான் இந்திய வீரர்கள் அங்கு 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

திருப்பி தாக்குங்கள்

திருப்பி தாக்குங்கள்

இந்தியாவிற்கு திருப்பி தாக்குவது தொடர்பாக உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் இந்திய வீரர்கள் தற்காப்பிற்காக மட்டுமே பதில் தாக்குதல் நடத்தினார்கள். இந்த நிலையில்தான் தற்போது இந்திய வீரர்களுக்கு எல்லையில் எதுவும் செய்ய வசதியாக "ஃப்ரி ஹேண்ட்" கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவின் தாக்குதலுக்கு இந்தியா உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் என்கிறார்கள் .

English summary
China standoff with India: India give free hand to its forces on the border issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X