For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லடாக் தாக்குதலுக்கு அவர்தான் "ஆர்டர்" போட்டது.. அமெரிக்க உளவுத்துறை ரிப்போர்ட்.. சீனாவிற்கு சிக்கல்!

லடாக்கில் கடந்த வாரம் நடந்த சண்டைக்கு யார் உத்தரவு போட்டது, எப்படி இந்த சண்டை திட்டமிடப்பட்டது என்று அமெரிக்க உளவுத்துறை ரிப்போர்ட் வெளியிட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

லடாக்: லடாக்கில் கடந்த வாரம் நடந்த சண்டைக்கு யார் உத்தரவு போட்டது, எப்படி இந்த சண்டை திட்டமிடப்பட்டது என்று அமெரிக்க உளவுத்துறை ரிப்போர்ட் வெளியிட்டு இருக்கிறது.

இந்தியா - சீனா இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் புதன் கிழமை நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். கல்வான் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு பகுதி 14ல் நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

லடாக் எல்லையில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த மே 5ம் தேதி சிறிய மோதலாக தொடங்கிய சண்டை தற்போது விஸ்வரூபம் எடுத்து உள்ளது.

கொரோனா கொடூரம்- 22 வயது திண்டுக்கல் இளைஞர் திருப்பூரில் மரணம்கொரோனா கொடூரம்- 22 வயது திண்டுக்கல் இளைஞர் திருப்பூரில் மரணம்

என்ன ரிப்போர்ட்

என்ன ரிப்போர்ட்

இந்த லடாக்கில் கடந்த வாரம் நடந்த சண்டைக்கு யார் உத்தரவு போட்டது, எப்படி இந்த சண்டை திட்டமிடப்பட்டது என்று அமெரிக்க உளவுத்துறை ரிப்போர்ட் வெளியிட்டு இருக்கிறது. அமெரிக்க உளவுத்துறை அறிக்கையின் படி, இந்த சண்டைக்கு சீனா பல நாட்களாக தயாராகி இருக்கிறது. நாங்கள் சண்டைக்கு தயார். எங்களிடம் மோதினால் உங்களுக்கு சேதம் அதிகமாக இருக்கும் என்று இந்தியாவிற்கு உணர்த்த சீனா முயன்று இருக்கிறது.

எல்லை பயங்கரம்

எல்லை பயங்கரம்

எல்லையில் சண்டைக்கு தயாராகி இருக்கிறோம். எங்களிடம் நீங்கள் மோத வேண்டாம் என்று சீனா இந்தியாவிற்கு மெசேஜ் அனுப்பும் விதமாக இந்த தாக்குதலை திட்டமிட்டு நிகழ்த்தி உள்ளது. இது எதேர்சையாக நடந்த சம்பவம் கிடையாது. இந்த தாக்குதலுக்கு சீனாவின் பிஎல்ஏ ஜெனரல் ஷாவோ சொங்கிதான் உத்தரவிட்டு இருக்கிறார். இவர்தான் மேலிட ஆலோசனைக்கு பின் உத்தரவிட்டுள்ளார்.

தயார் நிலை

தயார் நிலை

அதன்பின் சீனா வீரர்கள் தயாராக தங்கள் படைகளை வைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். பிஎல்ஏ ஜெனரல் ஷாவோ அந்நாட்டு படையில் பல வருடமாக வேலை பார்க்கும் மிக மூத்த அதிகாரி ஆவார். எல்லை பிரச்னையை இவர்தான் மேற்பார்வையிட்டு வருகிறார். இவர் உத்தரவின் பெயரில்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்தியா மீது தாக்குதல் நடத்த இதுதான் சரியான நேரம் என்று இவர் கூறியதால்தான் அப்போது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.

ஆனால தோல்வி

ஆனால தோல்வி

ஆனால் இதன் முடிவு சீனா எதிர்பார்த்தது போல வரவில்லை. இந்திய தரப்பில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதன் மூலம் இந்தியாவை மிரட்டலாம் என்று சீனா நினைத்தது. ஆனால் இந்தியாவை விட சீனாவின் தரப்பில் இதனால் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. சீனா தரப்பில் அதிகமான அளவில் வீரர்கள் பலியாகி உள்ளனர். சீனா இந்த ரிசல்டை எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறார்கள்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இதனால்தான் சீனா தனது வீரர்கள் எத்தனை பேர் பலியானார்கள் என்று இன்னும் தெரிவிக்கவில்லை. இதை தெரிவித்தால் சீனாவின் மதிப்பு குறையும்.உலக அளவில் சீனாவிற்கு பெரிய அவமானமாக மாறும். அதனால்தான் சீனா தற்போது அமைதி அமைதி என்று பேசுகிறது என்று அமெரிக்காவின் உளவுத்துறை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
China standoff with India: US intel explains who ordered the Galwan attack last week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X