For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வேவு பார்த்த சீன ராணுவ ஹெலிகாப்டர்

சீன ராணுவ ஹெலிக்காப்டர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வேவு பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்திய எல்லைக்குள் நுழைந்து வேவு பார்த்த சீன ராணுவ ஹெலிகாப்டர்- வீடியோ

    ஷமோலி: சீன ராணுவ ஹெலிக்காப்டர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வேவு பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் அடிக்கடி இந்திய எல்லைக்குள் நுழைந்து வட்டமடித்து வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் சீன ராணுவ ஹெலிகாப்டர் இதுவரை நான்கு முறை வட்டமடித்து உள்ளது.

    Chinese military helicopter entered Indian territory illegally

    இன்று உத்தரகாண்டின் ஷமோலி மாவட்டத்தில் உள்ள பரஹோட்டி பகுதியில் எல்லைக் கோட்டை தாண்டி இந்திய வான்பரப்பிற்குள் சீன ராணுவ ஹெலிகாப்டர் நுழைந்து வட்டமடித்துள்ளது.

    சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்திய வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைவது ஒரே மாதத்தில் இது 4வது முறையாகும். கடந்த 10ம் தேதி சீன ராணுவத்தின் 3 ஹெலிகாப்டர்கள், இந்திய எல்லைக்குள் 4 கிலோமீட்டர் தூரம் வரை ஊடுருவி பரஹோட்டி பகுதியில் 5 நிமிடங்கள் வட்டமடித்தன.

    இதற்கு முன்பு கடந்த 8ம் தேதி சீன ராணுவத்தின் 2 ஹெலிகாப்டர்கள், இந்திய வான் எல்லைக்குள் 18 கிலோமீட்டர் தூரத்திற்கு ஊடுருவி லடாக் பகுதியில் வட்டமடித்தன.

    பிப்ரவரி 27ம் தேதியும் சீன ஹெலிகாப்டர் ஒன்று 19 கிலோமீட்டர் தூரம் இந்திய வான் பரப்பிற்குள் ஊடுருவி லடாக்கின் பகுதியில் வட்டமடித்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chinese military helicopter entered Indian territory illegally spying incident caused a stir.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X