சென்னை சில்க்ஸ் போல சித்தூரில் எரிந்த ஜவுளிக்கடை - பல கோடி துணிகள் நாசம்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சித்தூர்: சித்தூரில் அடுக்குமாடு துணிக்கடையின் முதல் மாடியில் பற்றிய தீ ஐந்து மாடிகளுக்கும் பற்றி எரிந்ததில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள், பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

ஆந்திர மாநிலம் சித்தூரில் ஐந்து மாடிகொண்ட ஒரு தனியார் துணிக்கடையில் இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக முதல் மாடியில் பற்றிய தீ மளமளவென பற்றி ஐந்து மாடிகளுக்கும் பரவியுள்ளது.

Chittoor multi storied cloth shop fire accident

அதனையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் துணிக்கடையின் முதல் பகுதி சுவரை இடித்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதிதில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Fire Accident in Andhra-Oneindia Tamil

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னையில் உள்ள சென்னை சில்க்ஸ் அடுக்குமாடிக் கட்டிடத்திலும் இதுபோல தீப்பற்றி எரிந்து கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Andrapradesh, Chittoor multi storied cloth shop building got fired and fire service department controlled fire after long toil.
Please Wait while comments are loading...