For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம் மீது மர்ம நபர்கள் தாக்குதலால் பதற்றம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் ஹோலி சைல்டு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு அருகில் ஹோலி சைல்ட் ஆக்சீலியம் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிகூடத்தின் மீது நேற்று இரவு மர்மநபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதை தொடர்ந்து இன்று இந்த பள்ளிக்கூடம் மூடப்பட்டது. பள்ளிக்கு இன்று காலை வந்த மாணவர்கள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

Christian school vandalised in Delhi

பள்ளிக்கூடத்தில் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில் 2 மர்ம நபர்கள் பள்ளிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரும் பள்ளி தாளளர் அலுவலகத்தை தாக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த 2 ந் தேதி டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள அல்போன்சா தேவாலயத்தில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் 4 தேவாலயங்களில் மர்ம நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Holy Child Auxilium, a Christian school in Delhi’s Vasant Vihar, was allegedly vandalised on Thursday night, after which the institution has been shut down on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X