சாப்ட் இந்துத்துவா கொள்கையை கையில் எடுக்க வெட்கமே படக் கூடாது: ராஜஸ்தானில் காங். தலைவர்கள் காரசாரம்
ஜெய்ப்பூர்: பாஜகவை எதிர்கொள்வதற்காக மென்மையான இந்துத்துவா கொள்கையை கையில் எடுக்க காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வெட்கப்படக் கூடாது என அதன் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியது பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.
210 சவரன் போலி நகைகள்... சென்னை வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி - 4 ஆண்டுக்கு பின் சிக்கிய பலே கும்பல்
2024 லோக்சபா தேர்தலுக்கான தயாரிப்புகளை காங்கிரஸ் கையிலெடுக்கத் தொடங்கி உள்ளது. இதன் முதல் கட்டமாக ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. கடந்த் 3 நாட்களாக இந்த மாநாடு நடந்தது.

சோனியா பேச்சு
சிந்தனை அமர்வு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இம்மாநாட்டின் தொடக்கத்தில் பேசிய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, கட்சி நிர்வாகிகள் திறந்த மனதுடன் விவாதித்து கட்சியை வலுவான அமைப்பாக உருவாக்க வேண்டும். நமக்கு முன்னால் உள்ள பல சவால்களைப் பற்றி ஆலோசிக்க வேண்டும். கட்சி அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வர இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும். தேசிய பிரச்சனைகள் மற்றும் கட்சி அமைப்பு பற்றிய அர்த்தமுள்ள சுய சுயபரிசோதனை குறித்து விவாதிக்கப்படவேண்டும் என்றார்.

யாத்திரை நடத்தும் ராகுல்
மேலும் அக்டோபர் மாதம் முதல் நாடு தழுவிய யாத்திரையை அதாவது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளதாக இம்மாநாட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இம்மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி உரையாடல் உள்ளது. இதன் காரணமாக கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைக்கும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழல் பாஜகவிலோ, ஆர்எஸ்எஸ் அமைப்பிலோ இல்லை. வெகுஜன மக்களுடனான தொடர்பை காங்கிரஸ் தொலைத்து விட்டது என்பதை நாம் ஏற்க வேண்டும் என்றார்.

இந்துத்துவா கொள்கை
இதனிடையே காங்கிரஸின் கொள்கை கோட்பாடுகள் தொடர்பாக பல மூத்த தலைவர்கள் வெளிப்படையாகவே கருத்துகளை முன்வைத்தனர். இதில் ஒருதரப்பினர் பாஜகவை அதன் போக்கிலேயே போய் எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். அதற்காக இந்துத்துவா கொள்கைகளின் ஒரு பகுதியை அதாவது மென்மையான இந்துத்துவா போக்கை நாம் கையில் எடுக்க வேண்டும் என்று தரப்பினர் வாதிட்டனர். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. காங்கிரஸ் கட்சி தமது அடிப்படை கொள்கை, கோட்பாட்டில் இருந்து இம்மியும் விலகிவிடக் கூடாது; அதுதான் நமக்கு பலம்; அப்போதுதான் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற முடியும் என்றனர் சீனியர்கள்.

வலுவான மதச்சார்பின்மை
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அது நீண்டகாலமாகவே மென்மையான இந்துத்துவப் போக்கைதான் கடைபிடிக்கிறது; காங்கிரஸ் கட்சியின் பெரும் வீழ்ச்சிக்கும் அதுவே காரணம். இதில் இருந்து முற்று முழுதாக விலகி சிறுபான்மையினர் நம்பிக்கையை பெற்ற ஒரே கட்சியாக உருவெடுக்க, மீள வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. ஆகையால் நாம் வலிமையான மதச்சார்பின்மை கொள்கையைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.