குஜராத் எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டில்.. தம்பதி போல வந்து வேவு பார்த்த ரிபப்ளிக் டிவி டீம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் பிடாதி ரிசார்ட்டுக்குள் கணவன் மனைவி போல நுழைந்து வேவு பார்க்க முயன்ற ரிபப்ளிக் டிவி செய்தியாளரும் கேமராமேனும் காங்கிரஸ் பிரமுகர் மிலிந்த தர்மசென்னிடம் சிக்கியுள்ளனர்.

குஜராத் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலை தோற்கடிக்க எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் வேலையை பாஜக செய்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 44 பேர் பெங்களூரு அருகே பிடாதி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Congress Man catches Republic TV team in Eagleton resorts

இவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து வந்த கர்நாடகா அமைச்சர் சிவக்குமார் வருமானவரி சோதனையில் சிக்கியுள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகரான மிலிந்த தர்மசென் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

அதில், ரிபப்ளிக் டிவியின் செய்தி தொகுப்பாளர் பிரேமா ஸ்ரீதேவியும் அவரது கேமராமேனும் ஈகிள்டன் ரிசார்ட்டுக்கு கணவன் மனைவி போல் வந்தனர். ஆனால் அவர்கள் என்னிடம் வசமாக சிக்கிக் கொண்டனர். அவர்களது திட்டம் பலிக்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

டைம்ஸ் நவ் டிவியில் இருந்த அர்னாப் கோஸ்வாமி நடத்துவதுதான் ரிபப்ளிக் டிவி. ரிபப்ளிக் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்வதாக அண்மையில் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karnataka Congress man Milind Dharmasen posted in his FB page, "I caught Republic Tv anchor Prema Sridevi and her cameraman "Redhanded" at the Eagleton Golf Village..they came in disguise as husband and wife..their plan didn't succeed" on today.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற