For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியல் ஆதாயங்களுக்காக சர்ஜிகல் ஸ்டிரைக் வீடியோவை ரிலீஸ் செய்வதா? காங். காட்டம்

சர்ஜிகல் ஸ்டிரைக் வீடியோ விவகாரத்தில் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: அரசியல் ஆதாயங்களுக்காக சர்ஜிகல் ஸ்டிரைக் வீடியோவை வெளியிட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

2016-ம் ஆண்டு ராணுவ வீரர்கள் 17 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவி இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தியது.

Congress slams on release of Surgical strike video

இதில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. தற்போது 2 ஆண்டுகள் கழித்து இந்த வீடியோ காட்சிகளை ராணுவம் வெளியிட்டிருக்கிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகியோர் ராணுவ வெற்றிகளை அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்தியது கிடையாது.

தற்போதைய மோடி தலைமையிலான மத்திய அரசு தோல்வியைத்தான் சந்தித்து வருகிறது. இதனால் அரசியல் ஆதாயங்களுக்காக சர்ஜிகல் வீடியோவை வெளியிட்டுள்ளது. இது வன்மையாக கண்டனத்துக்குரியது என்றார்.

English summary
Congress accused the BJP of politicising the surgical strikes,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X