For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்தடுத்த பாதிப்பு.. ம.பியில் "பிளாக் பங்கஸ்" பாதிப்புக்கு உள்ளான 50 கொரோனா நோயாளிகள்.. பரபரப்பு!

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் 50 கொரோனா நோயாளிகளுக்கு பிளாக் பங்கஸ் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Mucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

    தீவிரமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்களுக்கும், சிகிச்சை பெற்று வரும் சிலருக்கும் இந்தியாவில் பிளாக் பங்கஸ் எனப்படும் மியூக்கர்மைக்கோசிஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கண்கள், மூளையை தாக்கும் இந்த பங்கஸ் தாக்குதல் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பட தொடங்கி உள்ளது.

    தீவிர கொரோனாவிற்கு மருந்துகள் எடுக்கும் நபர்கள் சிலருக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறையும் நேரங்களில் இந்த பிளாக் பங்கஸ் நோய் தாக்குதல் ஏற்படுகிறது.

    அறிகுறி

    அறிகுறி

    தலைவலி, காய்ச்சல், கண்களுக்கு கீழ் வலி, தொண்டையில் வலி, மூக்கடைப்பு ஆகியவை பிளாக் பங்கஸ் ஏற்பட்டால் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் இறப்பு சதவிகிதம் 50% ஆகும். முக்கியமாக சக்கரை வியாதி உள்ளவர்கள் மற்ற உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு பிளாக் பங்கஸ் ஏற்படுவது வழக்கமாகி உள்ளது. இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக பலருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    பாதிப்பு

    பாதிப்பு

    இந்த நிலையில்தான் மத்திய பிரதேசத்தில் 50 கொரோனா நோயாளிகளுக்கு பிளாக் பங்கஸ் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். போபால், ஜபல்பூர் போன்ற மத்திய பிரதேச நகரங்களில் இவர்களுக்கு பிளாக் பங்கஸ் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கான முதல் கட்ட சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    தயார் நிலை

    தயார் நிலை

    இவர்களுக்கான படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது. இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு இந்த சிகிச்சை பெற நிதி உதவி அளிக்கப்படும்.

    சிகிச்சை

    சிகிச்சை

    இதற்காக மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்படும். 10 படுக்கைகள் கொண்ட ஸ்பெஷல் வார்டுகள் முக்கிய மருத்துவமனைகளில் பிளாக் பங்கஸ் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

    English summary
    Coronavirus: 50 Patients affected by Black Fungus in Madhya Pradesh says CM Shivaraj Singh Chouhan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X