பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்ற விழா மேடை அருகே குண்டு வீச்சு - ஒருவர் கைது
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்ற விழா மேடை அருகே வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளந்தா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்ற விழா மேடை அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நாளந்தாவில் உள்ள சிலாவ் என்ற இடத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் 'ஜனசபா' கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது திடீரென நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதுவரை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். முதல்வர் அமர்ந்திருந்த மேடைக்கு பின்னால் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டாசுகளை வெடித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்வர் நிதிஷ் குமார் தனது சொந்த ஊரான பாட்னாவின் பக்தியார்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அங்குள்ள சபார் மருத்துவமனை வளாகத்தில், விடுதலை போராட்ட வீரர் ஷில்பத்ரா யாஜியின் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்.
அப்போது பாதுகாவலர்களைப் போன்று உடை அணிந்திருந்த ஒருவர் ஓடிச் சென்று நிதிஷ்குமாரை தாக்கினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாவலர்கள் அந்த நபரை பிடித்து அடி உதை கொடுத்தனர்.
இன்றைய தினம் நிதிஷ் குமார் பங்கேற்ற விழா மேடையில் குண்டு வீசப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications