மாட்டை விரட்டியதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைத் தாக்கிய பசு பாதுகாப்பு கும்பல் - ஷாக் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவா: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கடற்கரையில் நின்ற பசுமாட்டை 'சூ' என விரட்டியதால் அந்த சுற்றுலா பயணியையும் அவரின் கணவரையும் தடியாலும் செருப்பாலும் அடித்தனர் பசு காப்பாளர்கள். இதனால் அப்பகுதியே பரபரப்பானது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நாடு முழுவதும் பசு காப்பாளர்கள் எனும் தனி அமைப்பு உருவாகி, பசுக்களுக்கு பாதுகாப்புத் தருகிறோம் என கூறி மனிதர்களை வதைத்து வருகிறார்கள். இந்நிலையில் கோவாவுக்கு சுற்றுலாவுக்கு வந்த பயணிகளில் ஒரு தம்பதி, தங்கள் அருகில் இருந்த மாட்டை 'சூ' என கூறி விரட்டினர்.

 Cow savers hit foreign tourists violently

உடனே அங்கிருந்த பசு பாதுகாவலர்கள், தடிகளை எடுத்து பெண் சுற்றுலா பயணியை தாக்கத் தொடங்கினர். இங்குள்ள நிலவரம் தெரியாமல் அப்பெண்மணி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆனால் மீண்டும் மீண்டும் அப்பெண்ணைத் தாக்கினார்கள். அதுமட்டுமில்லாமல் மனைவியை காப்பாற்றச் சென்ற கணவரையும் துரத்தி துரத்தி அடித்தனர். தடியால் அடித்தது போதாது என்று செருப்பாலும் தாக்கினர்.

இதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த மற்ற சுற்றுலா பயணிகள், கற்காலத்தில் இருக்கிறார்கள் போல என எள்ளி நகையாடினர். கோவாவில் முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கோவாவின் மிகப் பெரிய வருமானம் சுற்றுலாத்துறையில் கிடைக்கும் வருவாய் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Goa tourist just said su to make move of a cow which stand near by them. Seeing this, 'Cow savers' hit them violently.
Please Wait while comments are loading...