For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வறட்சி, வெள்ளத்தால் பயமில்லை.. பயிர் காப்பீடு திட்டத்திற்கான தொகையை உயர்த்த மத்திய அரசு திட்டம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: 'பிரதான் மந்திரி பசல் பிமா யோஜனா' என்ற பெயரிலான, பயிர் காப்பீடு திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அரசு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

தற்போதைய நிதியாண்டில் ரூ.10,701 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், இந்த தொகை ரூ.13,000 கோடியாக உயர்த்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Crop Insurance Scheme Likely to Get more fund in FY19 Budget

2016ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த திட்டத்தில், குறைந்தபட்ச பிரீமியம் தொகை கட்டினால் போதுமானது, விவசாய பயிர்கள் சேதமடைந்தால் முழு அளவிலான தொகையை திரும்ப பெற முடியும்.

இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தொகை அதிகரிக்கப்பட உள்ளது. இதனால், விவசாயிகள் வறட்சி, வெள்ளம் போன்ற எந்த வகையான இடர்பாடுகளின்போதும், நஷ்டத்தை பற்றி கவலையின்றி விவசாயம் செய்ய முடியும்.

இந்த திட்டத்தின்கீழ், 2016-17ம் நிதியாண்டில், ரூ.13,661 கோடி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதில் ரூ.12,313 கோடி செட்டில் செய்யப்பட்டுள்ளது.அந்த நிதியாண்டில் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் எண்ணிக்கை 5.70 கோடி ரூபாயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The government is likely to increase the budget allocation for the Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) to Rs 13,000 crore for 2018-19 from Rs 10,701 crore for the current financial year, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X