For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெகனின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 3-ந் தேதி வரை நீட்டிப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

DA case: Jagan judicial custody extended till Oct. 3
ஹைதராபாத்: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் கடந்த ஆண்டு மே 17-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஜெகன் மோகனுடன் கைதான ஆடிட்டர் விஜய் சாய் ரெட்டி, தொழில் அதிபர் நிம்மகடா பிரசாத் உள்ளிட்டோரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அனைவரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை அக்டோபர் 3ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஏற்கெனவே ஜெகன் மோகன் ரெட்டி ஜாமீன் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான தீர்ப்பு வரும் 23-ந் தேதி அளிக்கப்பட இருக்கிறது.

English summary
A special CBI court in Hyderabad on Friday extended till October 3, the judicial remand of YSR Congress chief Y.S. Jaganmohan Reddy and others accused in connection with an alleged disproportionate assets case against the Kadapa MP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X