For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழைகள் நலனுக்காகவே ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பு: மோடி பேச்சு

ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது ஏழை எளிய மக்களின் கரங்களை வலுப்படுத்தும் செயல் என்று பிரதமர் நநேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

காந்திநகர்: 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது நாட்டில் உள்ள ஏழை-எளிய மக்களின் கரத்தை வலுப்படுத்தும் செயல் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் பனஸ்காந்த் மாவட்டம் தீசா என்ற நகரத்தில் நடந்த விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, கடந்த 70 ஆண்டுகளாக நேர்மை கொள்ளை அடிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். நாட்டின் ஏழை-எளிய மக்களுடன் தான் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Demonetisation to strengthen hands of poor: Modi

மேலும், நாட்டில் உள்ள ஏழை-எளிய மக்களின் கரத்தை வலுப்படுத்தவே பழைய 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தீவிரவாத செயலகளுக்கும், கள்ள ரூபாய் நோட்டுகளுக்கும் எதிரான நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.

இந்த நடவடிக்கையினால் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் தீவிரவாதிகளின் செயல்களை கட்டுப்படுத்துவதிலும், அவர்களை பலவீனப்படுத்துவதிலும் வெற்றி கண்டு வருவதாக மோடி கூறினார்.

ஊழலினால் அதிருப்தி அடைந்திருப்பவர்கள் யார் என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி அந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடாதவர்கள் மட்டுமே என்றும் பதில் அளித்தார். அவர்களே ஏழை-எளிய மக்கள் அவர்கள்தான் ஊழலினால் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Prime Minister Narendra Modi said on Saturday said the decision to ban old Rs 500 and 1,000 notes was taken to strengthen the hands of the nation's poor.
500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது நாட்டில் உள்ள ஏழை-எளிய மக்களின் கரத்தை வலுப்படுத்தும் செயல் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi said on Saturday said the decision to ban old Rs 500 and 1,000 notes was taken to strengthen the hands of the nation's poor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X