For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணத் தட்டுப்பாடு... கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

By Shankar
Google Oneindia Tamil News

லக்னோ: பணத் தட்டுப்பாடு காரணமாக கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாததால் உபியில் ஒரு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரபி ரதேசத்தின் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பசர்க் கிராமத்தை சேர்ந்த மாணவர் சுரேஷ் (வயது 18).

Demonitisation effect: UP student commits suicide

இவர் அந்த கிராமத்தின் அருகில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரியில் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கு நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு பணம் எடுப்பதற்காக சுரேஷ் கடந்த சில நாட்களாக வங்கிக்கு சென்று கொண்டிருந்தார். ஆனால் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கியில் அதிகக் கூட்டம் காணப்பட்டதால், தினந்தோறும் வரிசையில் நின்ற பிறகும் அவரால் பணம் எடுக்க முடியவில்லை.

நேற்று முன்தினமும் இவ்வாறு வெறுங்கையுடன் திரும்பி வந்த இவர், பணம் எடுக்க முடியாத விரக்தியில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சுரேஷ் தற்கொலை செய்த தகவல் அறிந்ததும் அவரது கிராமத்தினர் அந்த வங்கி மீது கல்வீசி தாக்கி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

English summary
A vexed college student in UP was committed suicide due to not able to get money to pay his college fees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X