For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மங்கல்சூத்ரா விளம்பரமா, காமசூத்ரா விளம்பரமா? டிசைனர் வெளியிட்ட போட்டாவால் சர்ச்சை

Google Oneindia Tamil News

கொல்கத்தா: பிரபல நகை மற்றும் ஆடை வடிவமைப்பாளரான சப்யசாச்சி முகர்ஜி தனது சமீபத்திய நகை விளம்பரத்திற்காக கடுமையான விமர்சனங்களை பரிசாக பெற்றுக் கொண்டிருக்கிறார்.

புது வகை மங்கல்சூத்ரா (தாலி) என்று அவர் அறிமுகம் செய்த விளம்பர படத்தை பார்த்த நெட்டிசன்கள், இது மங்கல்சூத்ராவா காமசூத்ராவா என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

சென்னையில் கொடூரமாக கொல்லப்பட்ட விசிக பிரமுகர்.. வெளியான சிசிடிவி காட்சி.. 7 பேர் சிக்கினர்! சென்னையில் கொடூரமாக கொல்லப்பட்ட விசிக பிரமுகர்.. வெளியான சிசிடிவி காட்சி.. 7 பேர் சிக்கினர்!

ராயல் பெங்கால் மங்கல்சூத்ரா என்று அவர் இன்ஸ்டாகிராமில் இந்த நகையை அறிமுகம் செய்திருந்தார். ஆனால் அதில் சிக்கல் வேறு வகையில் வந்து எட்டிப் பார்த்தது.

உள்ளாடை பெண்

உள்ளாடை பெண்

உள்ளாடை மட்டுமே அணிந்த பெண், இந்த தாலியை கழுத்தில் போட்டபடி ஆணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களை அவர் பயன்படுத்தியதுதான் சர்ச்சைகளுக்கு காரணம். அணிந்த ஒரே பாலின மற்றும் பெண்கள் விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
சில புகைப்படங்கள் - இன்டிமேட் ஃபைன் ஜூவல்லரி என்று தலைப்பிடப்பட்டுள்ளது

கலை வடிவம்

கலை வடிவம்

இதை பார்த்த நெட்டிசன்கள் சப்யசாச்சி முகர்ஜி, மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.
நகை தயாரிப்பு என்பது ஒரு சிறந்த கலை வடிவம். எனவே இதை வேறு மாதிரி விளம்பரப்படுத்தி இருக்க வேண்டும் என்று இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் அறிவுரை செய்ததை பார்க்க முடிகிறது.

 மருதாணியை காட்டலாம்

மருதாணியை காட்டலாம்

இப்படி காட்டியதற்கு பதிலாக, புது மணப்பெண் தனது கை நிறைய மருதாணி அணிந்துகொண்டு, காலை நேரத்தில் காபி கப்புடன் வருவதைப் போலவும் அப்போது, அவர் நீங்கள் அறிமுகம் செய்துள்ள இந்த தாலியை அணிந்து இருப்பது போலவும் காட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று ஒரு கமென்ட் வந்துள்ளது. ஆனால் தினமுமா புதுப் பெண் இப்படி இருப்பார். எனவே சப்யசாச்சி காட்டியுள்ள ஆடை சரிதான் என்று பதில் கமெண்ட் வந்து விழுந்துள்ளதையும் பார்க்க முடிகிறது.

கவர்ச்சிதான் முக்கியம்

கவர்ச்சிதான் முக்கியம்

இன்னொரு பெண் வெளியிட்ட கமெண்ட்டில், இங்கே தாலியை யாரும் பார்க்கவில்லை. ஒரு தசை பிடிப்புள்ள பெண் கவர்ச்சியாக இருப்பதுதான் காட்சி பொருளாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதற்கு பதிலடியாக சிலர், நீங்கள் ஏன் அதை பார்க்கிறீர்கள். தாலியை மட்டும் பாருங்கள் என்று கமெண்ட் செய்துள்ளனர்.

தாலி என்றால் இது

தாலி என்றால் இது

நிர்வாணத்தின் மீது நம்பிக்கை கொண்ட யாரோதான் சப்யசாச்சி முகர்ஜிக்கு நிதி உதவி செய்திருக்க வேண்டும். எனவேதான், இப்படியான போட்டோவை வெளியிட்டு விளம்பரம் செய்கிறார்கள் என்கிறது இன்னொரு கமெண்ட். தாலி என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று ஒரு போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் இன்னொரு நெட்டிசன். இப்படியாக பலதரப்பட்ட கமெண்ட்களுக்கு காரணமாக மாறியுள்ளது தாலி விளம்பரம்.

English summary
Designer Sabyasachi Mangalsutra Advertisement creates backlash in social media as netizens says it is promoting nudity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X