For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய துணைத் தூதர் நடத்தப்பட்ட விதம் வருத்தத்துக்குரியது: மன்மோகன்சிங்

By Mathi
Google Oneindia Tamil News

PM Manmohan Singh
டெல்லி: அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் நடத்தப்பட்ட விதம் வருத்தத்திற்குரியது என பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள இந்தியா துணைத் தூதர் தேவ்யானி கோபர்கடே கடந்த 12ந் தேதி, அமெரிக்க போலீசாரால் நடுரோட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். மேலும், அவரது உடைகளை களைந்து சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இந்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், 'அமெரிக்காவில் இந்திய துணைத் தலைவர் தேவயானி நடத்தப்பட்ட விதம் வருத்தத்துக்குரியது' என்றார்.

மேலும், லோக்பால் மசோதா குறித்து அவர் கூறுகையில், 'லோக்பால் மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. வரலாறு படைக்கும் திருப்புமுனையாக லோக்பால் மசோதா நிறைவேறியிருக்கிறது' என்றார்.

அத்துடன் இந்த சம்பவத்துக்கு நாடாளுமன்றத்தில் இன்று அனைத்து கட்சிகளும் கடும் கண்டனமும் தெரிவித்தன.

English summary
The arrest and humiliation of high-ranking Indian diplomat Devyani Khobragade in the US, which has triggered a massive diplomatic row, was today condemned in Parliament by parties across the political spectrum. "The treatment meted out to Indian Deputy Consul General by the US is deplorable," PM Manmohan Singh said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X