வைரலான அம்பலப்புழா பாடல்... "இவிட வரனும் டோணி மோளே".. கோயில் விழாவிற்கு கேரளா அழைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம் : இந்திய கிரிக்கெட் வீரர் டோணியின் மகளை சிறப்பு அழைப்பாளராக கோவில் திருவிழாவில் பங்கேற்க கேரளாவின் அம்பலப்புழா கிருஷ்ணன் கோவில் அழைப்பு விடுத்துள்ளது. ஸிவா பாடிய மலையாளப் பாடல் பிரபலமானதையடுத்து தேவசம்போர்டு இந்த அழைப்பை விடுத்துள்ளது.

சமூக வலைதளத்தில் அதிக ரசிகர்களைக் கொண்டவர்கள் பட்டியலில் டோணியின் மகள் ஸிவாவிற்கு தனி இடம் உண்டு. டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று ஸிவா தொடர்பாக பதிவிடப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் லைக்குகளை அள்ளிக் குவிக்கும். அண்மையில் கால்பந்து விளையாடிய டோணிக்கு கிரவுண்டில் தண்ணீர் பாட்டில் கொடுத்த புகைப்படம் வைரலானது.

இதே போன்று இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியுடன் ஸிவா உரையாடும் உரையாடல் வீடியோவும் சமூக வலைதளத்தை அதிரச் செய்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் ஸிவா ஒரு மலையாளப்பாடல் பாடும் வீடியோ வெளியானது.

 ஸிவா பாடிய கிருஷ்ணன் பாடல்

ஸிவா பாடிய கிருஷ்ணன் பாடல்

அழகு மழலையில் 2 வயது ஸிவா மலையாளத்தில் பாடியது கிருஷ்ணனை போற்றும் "அம்பலப்புழா உன்னிக் கண்ணணோடு நீ" என்ற பிரபலப் பாடல். 1992ம் ஆண்டில் அத்வைத்யம் என்ற படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் பல பாடகர்களின் குரல்களில் கிருஷ்ணன் துதிப் பாடலாக பாடப்பட்டுள்ளது.

 பாராட்டுகளை அள்ளிய ஸிவா

பாராட்டுகளை அள்ளிய ஸிவா

மலையாளப்பாடலின் வரிகளை அச்சுபிசகாமல் ஸிவா பாடி அசத்தியது மலையாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஸிவா பாடியப் பாடல் மூலம் கேரள மாநிலம் ஆழப்புலா மாவட்டம் அம்பலப்புழா உன்னிகிருஷ்ணன் கோயிலும் உலக அளவில் பிரசித்தி பெற்றுவிட்டது.

 விழாவிற்கு அழைப்பு

விழாவிற்கு அழைப்பு

இதனால் இந்தக் கோவில் நிர்வாகம் ஜனவரி 14ம் தேதி நடைபெற உள்ள கலவம் திருவிழாவிற்கு தலைமை ஏற்குமாறு ஸிவாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் இந்த அழைப்பு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

2 வயதில் ஸிவாவிற்கு சர்ப்ரைஸ்

ஸிவாவின் பாட்டி ஷீலா கேரளாவைச் சேர்ந்தவர் என்றும் அவர் தான் ஸிவாவிற்கு இந்தப் பாடலை கற்றக் கொடுத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. டோணி நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் பிஸியாக இருக்கும் நேரத்தில் அவரது மகள் ஸிவாவிற்கு இப்படி ஒரு சர்ப்ரைஸ் அழைப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
After Ziva Dhoni's Malayalam Song Goes Viral, Kerala'a AMbalappuzha temple Authorities Invites Her As Guest for temple celebration which is on January 14th.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற